நிபா வைரஸ் தாக்கம்! விடுமுறையை ரத்து செய்த செவிலியர்கள்!
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் உத்தரப்பிரதேசத்தில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த செவிலியர்கள் தங்கள் விடுமுறையை ரத்து செய்துள்ளனர்!
உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டில் உள்ள சில மருத்துவ இல்லங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்த ஊர் செல்ல விடுமுறை வழங்கப்பட்டது.
ஆனால், கேரளாவில் கடந்த சில தினங்களாக நிபா எனும் அரிய வகை வைரஸ் மக்களிடையே பரவி வருவதால் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தங்கள் சொந்த ஊரான கேரளாவுக்கு செல்ல விரும்பிய செவிலியர்கள், நிபா வைரஸ் தாக்கம் காரணமாக தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் விடுமுறையை ரத்து செய்தனர். நிபா ரைவஸ் தாக்குதலால் செவிலியர்கள் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளனர் என்று மீரட் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஜே.வி.சிக்கரா கூறியுள்ளார்.
தற்போது வரை, கேரளாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், சிகிச்சைக்கு வரும் அனைவரிடமும் இந்த நிஃபா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் அறிகுறியாக, மூளைகாய்ச்சல் ஏற்பட்டு, பின் உடல்களில் உள்ள அனைத்து செய்ல்பாடுகளும் நின்று மூளைச்சாவு ஏற்படுத்தும் என்று மருத்துவர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.