தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் மலையேறும் பயிற்சிக்காக சென்னை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து சுமார் 39 பேர் சென்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொழுக்குமலைப் பகுதியில் இருந்து அனைவரும் மீண்டும் அடிவாரத்துக்கு திரும்பியபோது, திடீரென காட்டுத் தீ ஏற்பட்டதில் அக்குழுவினரும் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் காட்டுத்தீயில் சிக்க நேர்ந்தது, இதையடுத்து அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. 


இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள். 10 பேர் காயம் எதுவும் அடையவில்லை.


இவ்விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மதுரை, சென்னை கோவை உள்பட பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இக்கோர சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள அதுல்ய மிஸ்ரா IAS அவர்களை நியமித்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இவர்களில் 100 சதவீத தீக்காயம் ஏற்பட்டு இருந்த நிஷா அன்றிரவு பலியான நிலையில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.


தொடர்ந்து சிகிச்சை பலனளிக்காமல் 5 பேர் உயிரிழந்தனர். அவர்களையடுத்து, மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோட்டை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் உயிரிழந்ததால்  பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.


இந்நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயஸ்ரீ என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.