4-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கான தும்கா கருவூல மோசடி வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மற்றொரு முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா குற்றமற்றவர் என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீஹார் முதல்வராக, 1994 -1996-ல் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத் யாதவ் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்து முதல்-மந்திரி ஆனார். அப்போது, கால்நடை தீவனம் வாங்கியதாக போலி பில்கள் கொடுத்து, அரசு கருவூலத்தில் பணம் எடுத்து, மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன.


இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தொடர்புள்ள அனைத்து வழக்குகளும், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தன இதில் தியோகர் மாவட்ட கருவூலத்தில், ரூ.89.27 லட்சம் எடுத்து, மோசடி செய்தது தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்தது.



ராஞ்சி சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிவ்பால் சிங், கடந்த ஆண்டு டிசம்பரில் தீர்ப்பளித்தார். அப்போது, 'லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி' என, நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும், 15 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். 
 
ஏற்கனவே 3 மாட்டுத் தீவன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. லாலுவுக்கு மொத்தம் 13.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது


இந்நிலையில், 4-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்காக தும்கா கருவூல மோசடி விசாரிக்கப்பட்டது. 


இதன் விசாரணை கடந்த 5-ந் தேதி நிறைவடைந்தது. இவ்வழக்கில் இன்று ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் ஜெகநாத் மிஸ்ரா குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 


மேலும், ஊழல் வழக்குகளில் சிறை தண்டனையை அனுபவிப்பதால் லாலுவால் 6 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.