வீடுகளில் இந்த இடங்களில் எல்லாம் தீபம் வைத்தால் புண்ணியம்!
அனைவரின் வீடுகளிலும் நாம் தீபம் ஏற்றி பூஜை செய்வது வழக்கம். வீடுகளில் தீபம் எங்கெல்லாம் வைத்தால் அதிஷ்டம் வந்துசேரும் என்று தெரியுமா?.
இந்துக்கள் அனைவரின் வீடுகளிலும் தீபம் ஏற்றி பூஜை செய்வது பாரம்பரிய வழக்கம் ஆகும். நமது வீடுகளில் தீபம் ஏற்றக்கூடிய இடங்கள் மற்றும் தீபம் ஏற்றக்கூடாத இடங்களும் இருக்கிறது. தீபம் ஏற்றுவதால் நிறைய நன்மைகள் இருக்கிறது. அதில் ஒன்றுதான் தன்னம்பிக்கையை ஏற்படுத்தகூடிய சிந்தனையை ஏற்படுத்தும்.
வீடுகளில் தீபம் வைக்கும் இடங்கள்....!
திண்ணைகளில் - நான்கு விளக்குகள்
மாடக்குழிகளில் - இரண்டு விளக்குகள்
நிலைப்படியில் - இரண்டு விளக்குகள்
வாசல் நடைகளில் - இரண்டு விளக்குகள்
முற்றத்தில் - நான்கு விளக்குகள்
தீபங்களின் எண்ணிக்கையும் அதன் நன்மையும்...!
பூஜையறையில் - இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலம் உண்டாகும்.
சமையல் அறையில் - ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.
தோட்டம் உள்ளிட்ட வெளிப்பகுதி - எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.