டெல்லி: ரெயில்வே ஊழியர்களுக்கு முதல் முறையாக எல்.டி.சி. என்று அழைக்கப்படுகிற விடுமுறை கால பயண சலுகை வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரெயில்வே ஊழிர்கள் ரெயில்களில் பயணம் மேற்கொள்ள  இலவச பாஸ் வழங்கப்படுவதால் இந்த சலுகை இது வரை மறுக்கப்பட்டு வந்தது.  ஆனால் ரெயில்வே ஊழியர்களுக்கும், இந்த சலுகையை வழங்க வேண்டும் என்று 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்தது.அதன் அடிப்படையில் ரெயில்வே ஊழியருக்கும் அவரது வாழ்க்கை துணைக்கும் இந்த சலுகை அளிக்கப்படவுள்ளது. இந்த தொகைக்கு வருமான வரி விலக்கு உள்ளது. 


இது குறித்து மத்திய பணியாளர்கள் நலன் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 


அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது....! 


அரசு ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் விடுமுறை கால பயண சலுகை அனுமதிக்கப்படுகிறது. ரெயில்வே ஊழியர்களுக்கு இலவச பயண அனுமதி வழங்கப்படுவதால், விடுமுறை கால பயண சலுகை வழங்கப்படுவது இல்லை.


ஆனால் ரெயில்வே ஊழியர்களுக்கும், இந்த சலுகையை வழங்க வேண்டும் என்று 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்தது. இதுபற்றி பணியாளர் நலன் துறை அமைச்சகம், ரெயில்வே அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்தது.


அதைத் தொடர்ந்து, அகில இந்திய அளவிலான விடுமுறை கால பயண சலுகையை ரெயில்வே ஊழியர்கள் 4 ஆண்டுகளில் ஒரு முறை பயன்படுத்திக்கொள்ளலாம். இது ரெயில்வே ஊழியர்களின் விருப்பத்தைப் பொறுத்தது.அதே நேரத்தில் ரெயில்வே ஊழியர்களுக்கு ரெயில்களில் இலவச பயண அனுமதி தொடரும்.