டென்னிஸ் போட்டியில் உலக சாதனை படைத்த இந்திய வீரர்!
டேவிஸ் கோப்பை இரட்டையர் பிரிவில் அதிக வெற்றி குவித்து இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் உலக சாதனை படைத்துள்ளார்!
டியான்ஜின்: டேவிஸ் கோப்பை இரட்டையர் பிரிவில் அதிக வெற்றி குவித்து இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் உலக சாதனை படைத்துள்ளார்!
சீனாவின் டியான்ஜின் நகரில் டேவிஸ் கோப்பை போட்டிகள் நடைப்பெற்று வருகின்றது. 2 நாட்கள் நடைப்பெறும் இப்போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி இரட்டையர் பிரிவில் 44 வயது லியாண்டர் பயஸ் - போபன்னா ஜோடி சீனாவின் மாவோ ஜின் - ஷாங்க் ஜீ ஜோடியினை 5-7 7-6 7-6 என்ற கணக்கில் வென்றது. இந்த வெற்றியானது பயஸின் 43-வது வெற்றியாகும்.
இந்த வெற்றியின் மூலம் அவர் டேவிஸ் கோப்பை இரட்டையர் பிரிவில் அதிக வெற்றி குவித்தவர் எனும் உலக சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக கடந்த 2017-ல் இந்தியா-நியூஸிலாந்து, உஸ்பெகிஸ்தான் இடையே நடந்த டேவிஸ் கோப்பை போட்டிகளில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் லியாண்டர் பயஸால் இச்சாதனையை நிகழ்த்த முடியாமல் போனது.
இந்நிலையில் தற்போது இந்த வெற்றியின் மூலம் இந்த சாதனையினை படைத்துள்ளார் பயஸ்.