யார் யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்ஷம் அணியலாம்?... இதோ முழு விவரம்..!
ஐஸ்வர்யங்கள்அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹா பேரானந்தத்தைத் தரும்..!
ஐஸ்வர்யங்கள்அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹா பேரானந்தத்தைத் தரும்..!
இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் -பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் (RUDRAKSHA) அணிய வேண்டும். ஏனெனில் நம்மைப் படைத்ததேபாவங்களைப் போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே நம் வாழ்க்கையில் வரும்கஷ்டம், வேதனை, துன்பம், வலி இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராட்ஷம்அணிய வேண்டும். ருத்ராட்ஷம் அணிந்தால் மறுவிறவி இல்லை மஹா பேரானந்தமே. ருத்ராட்ஷம்அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்றுசொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக் கூடாது. இறைவனுக்கு ஒருவர் மீதுகருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்ஷம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும்.ருத்ராட்ஷம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது.
சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்துதோன்றியதே ருத்ராட்ஷம். ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில்ஒருவராவார். சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?. அதனால் யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாகருத்ராட்ஷத்தை அணியவேண்டும். ருத்ராட்ஷதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவேகூடாது. நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல்வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை. நெற்றியில்திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானது.
யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்ஷம் அணியலாம்?
ருத்ராட்ஷத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக்காணலாம், இதற்குத்தான் முகம் என்று பெயர். ஐந்து கோடுகள்இருந்தால் ஐந்து முகம். ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிடவேண்டியதுதான். எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும்தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்.
ALSO READ | லட்சுமி தேவியின் அனுக்கிரகத்தை பெற இந்த 10 உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்!!
அதுமட்டுமல்ல, எல்லாஇடங்களிலும் எளிதில், மிகமிகசகாயமான விலையில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம் அணிவதே போதுமானது. பகவானின்திருமுகம் ஐந்து. நமச்சிவாய ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்).நமது கை கால் விரல்கள் ஐந்து.புலன்கள் ஐந்து. ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார்.ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம்.ஐந்து முக ருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்றபலன்களும் அடங்கிவிடும்.
பெண்கள்ருத்ராட்ஷம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?
பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்திஅவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, கொந்தளகம்சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்றுவிவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330)பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிறதிருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரிஅணிந்து கொண்டாளாம். பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையேருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள்!. எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப்பின்பற்றி ருத்ராட்ஷம் அணிய வேண்டும். மேலும், சிவமஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சிவபெருமானேவலியுறுத்தியுள்ளார்.
எல்லாநாட்களிலும் பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாமா?
பெண்கள், தங்களுடையதாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச்சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர். அதை எல்லா நாட்களிலும் தானேஅணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள்வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே? இவற்றைப் போல் ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும்கழற்றாமல் அணிய வேண்டும். ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல. உயிரின்ஆத்மாவிற்காகவே சிவபெருமானால் அருளப்பட்டது.
நீத்தார்கடன் (திதி), பெண்கள் தீட்டு, கணவன்- மனைவி இல்லறதாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா?
முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில்எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது. நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும்போது அதை செய்விப்பவரும், செய்பவரும்ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும்என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்றுநிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.