இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களில் ‘ஒலி(Honking)’ அளவிற்கான கட்டுப்பாடு கொண்டுவர வேண்டுமென 11 வயது சிறுமி மகேந்திர நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, நாடுமுழுவதும் வாகனம் ஓட்டும்போது இருக்கும் பிரச்சனை, மற்ற வாகனங்களில் ஒலி இறைச்சல்கள் தான், அதிலும் குறிப்பாக ட்ராபிக் சமயத்தில் அருகில் இருக்கும் வாகனங்கள் எழுப்பும் வாகனங்கள் எழுப்பும் ஒலி தலையை உள்ளிருந்து வெடிக்க செய்யும்.


இந்நிலையில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமாக மகேந்திர நிறுவனத்திற்கு, தங்கள் காரில் இந்த ஒலி பிரச்சனைகளை சமாளிக்க புது வழி ஒன்றினை பயன்படுத்தலாம் என சிறுமி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தினை மகேங்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



மும்பையை சேர்ந்த மஹிகா மிஷ்ரா என்ற 7-ஆம் வகுப்பு சிறுமி எழுதியுள்ள இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது.... "எனக்கு நெடுந்தூர பயணங்கள் மேற்கொள்வது மிகவும் பிடிக்கும். ஆனால் பயணத்தின் போது, குறிப்பாக ட்ராபிக் சமயத்தின் போது அருகில் இருக்கும் வாகனங்கள் மூலம் எழுப்பப்படும் ஒலி பயணத்தின் ரசனையினை கெடுத்து விடுகிறது. 


இந்த பிரச்சனையினை சமாளிக்க 10 நிமிடங்களுக்கு 5 முறை மட்டுமே ஒலி எழுப்பும் அளவிற்கு புது தொழில்நுட்பத்தை தங்களது காரில் புகுத்த வேண்டும். மேலும் ஒரு முறை ஒலி எழுப்பினால் அது 3 நொடிகள் மட்டுமே ஒலிக்க வேண்டும். தங்களது தயாரிப்புகளில் இந்த முறையை பயன்படுத்தினால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்" என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் தனது கடிதத்திற்கு தாங்கள் பதில் அளித்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தினை மேற்கோள்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆனந்த் மகேந்திரா, மக்களின் தேவைக்காக எந்நேரமும் தானும் இந்த சிறுமியை போல் சிந்தித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.