தனது பெற்றோரின் முழு சம்மதத்துடன் துறவறம் பூண்டார் சூரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த குஷி ஷா என்ற 12 வயது சிறுமிக்கு தான் துறவியாக வென்று என்ற எண்ணம் இருந்துள்ளது. இது குறித்து அவர் அவரது பெற்றோரிடம் கூறுகையில், அவரது குடும்பத்தினர் இவரது முடிவுக்கு எவ்வித ஈதிர்ப்பும் இன்றி சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர் இன்று அவர் பெற்றோரின் முழுமையான சம்மத்துடன் துறவம் பூண்டார். குஷி துறவியாவதை கொண்டாடும் விதமாக குடும்பத்தினர் அனைவரும் கோலாகலமாக கொண்டாடினர். 


இதுகுறித்து குஷி ஷா கூறுகையில்; ‘நாம் கொண்டாடும் இந்த வாழ்க்கை நிரந்தரமானது அல்ல. உலகம் நமக்கு இதையே திரும்ப திரும்ப எடுத்துரைக்கும். அமைதியாகவும், ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும் இருக்க எளிமையான வாழ்வினை வாழ வேண்டும். எனக்கு 8 வயதில் இருந்தே துறவியாக வேண்டும் என்ற என்ன இருந்தது. மேலும், சிமந்தர் சுவாமியின் கூற்றுப்படி, ஒருவர் 8 வயதிலேயே உலக இன்பங்களை துறக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால், எனக்கு துறவறம் பூனை 12 வயதாகிவிட்டது என தெரிவிவ்த்துள்ளார்.



மேலும், இது குறித்து அந்த சிறுமியின் தந்தை கூறுகையில், ‘இத்தனை சிறிய வயதிலேயே இவருக்கு இவ்வளவு நுண்ணறிவு இருப்பதை நினைத்து  நாங்கள் அனைவரும் பெருமை கொள்கிறோம். அனைத்து குழந்தைகளுக்கும் இந்த எண்ணம் தோன்றாது.  குஷி நிச்சயம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளி விளக்காய் இருப்பாள்.


மேலும், சிறந்த துறவியாக வலம் வருவாள். அவள் ஏற்கனவே ஒரு துறவியாக ஆயிரம் கிலோமீட்டர் பாதங்களால் நடந்து சென்று துறவிகளின் வாழ்க்கை சூழலை நன்கு உணர்ந்தவள். இன்று துறவியாகவே மாறிவிட்டாள்’ என கூறினார்.