சிஎஸ்கே மற்றும் பிபிகேஎஸ் அணிகள் மோதும் ஐபிஎல் 2024 போட்டி இன்று மே 1 புதன்கிழமை சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான 2 போட்டிகளுக்கும் தோல்வியை சந்தித்த சென்னை அணி, சேப்பாக்கத்தில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மகத்தான வெற்றியை பெற்றது.
இந்த வெற்றி சென்னை அணி பிளேஆப் கனவை தக்கவைத்து. தற்போது 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதே 10 புள்ளிகளுடன் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் உள்ளன.
இந்நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளில் பஞ்சாப் அணியுடன் விளையாட உள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளே ஆப்க்கு தகுதி பெறுவதில் சிக்கல்கள் ஏற்படாதது.
நேற்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற லக்னோ 3வது இடத்தில் இருந்த சென்னை அணியை நான்காவது இடத்திற்கு தள்ளி உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெரும் பட்சத்தில் மீண்டும் 3வது இடத்திற்கு அல்லது 2வது இடத்திற்கு செல்ல முடியும்.
மறுபுறம் பஞ்சாப் அணி 262 ரன்கள் என்ற இமாலய இலக்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது. டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய சேஸிங்காக இது மாறி உள்ளது.