இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்திய தங்கத்தால் செய்யப்பட்ட 18 காரட் டாய்லெட் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருடப்பட்ட டாய்லெட்டினை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லண்டன் வுட்ஸ்டாக் பகுதியில் உள்ளது பெலன்கிம் அரண்மனை. இது வின்ஸ்டன் சர்ச்சில் குடும்பம் வாழ்ந்த அரண்மனை ஆகும். இங்கு வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்திய தங்கத்தினால் செய்யப்பட்ட டாய்லெட் கண்காட்சி பொருளாக வைக்கப்பட்டிருந்தது. 


இதனை சனியன்று திருடர்கள் திருடியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது. 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட இந்த டாய்லெட் மதிப்பு ஒரு மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில்; இந்த அருங்காட்சியகத்தில் டாய்லெட் வைக்கப்பட்டிருந்த இடத்தில் சேதம் ஏற்பட்டதுடன் தண்ணீரும் கசிவு வெளியே வந்தது. இதனையடுத்து டாய்லெட் திருடப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பணியாற்றிய 66-வயத் நபர் ஒருவரும் மாயமாகியுள்ளர். திருட்டுச் சம்பவத்திற்கும் இவருக்கும் தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. இவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்.


தங்க டாய்லெட் திருட்டு போனதால் அரண்மனையை தற்போதைக்கு அடைக்க உத்தரவிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார். லண்டனில் தங்க டாய்லெட் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது