மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் இரண்டு அவித்த முட்டைகளுக்கு ரூ.1700 கட்டணம் வசூலித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்தி தார் என்பவர் மும்பையில் உள்ள Four Seasons என்ற ஹோட்டலில் ஆம்லெட், அவித்த முட்டை, கூல்டிருங்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டுள்ளார். ஹோட்டல் நிர்வாகம் கொடுத்த விலைப்பட்டியலை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.


ஹோட்டல் நிர்வாகம் 2 அவித்த முட்டைகளுக்கு ரூ.1700 கட்டணம், 1 ஆம்லெட்டுக்கு ரூ.850 கட்டணம் என பில் போட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக் அந்த பில்லின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ‘2 முட்டையின் விலை ரூ.1700. பணக்கார கோழியாக இருக்கும் போல’ என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து பலரும் அந்த ட்விட்டை ரீ ட்வீட் செய்து ஹோட்டல் நிர்வாகத்தை கிண்டல் செய்தும், திட்டியும் வருகின்றனர். மேலும், அந்த ரசீதில் ஒரு ஆம்லேட் 850 ரூபாய், சாதம் 5100 என மொத்தம் 6938.40 ரூபாய் பில் கொடுத்துள்ளனர். 



சமீபத்தில், இந்தியில் பிரபல நடிகராக விளங்கும் ராகுல் போஸ் படப்பிடிப்புக்காக சண்டிகர் சென்றுள்ளார். அங்கு உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கினார். உடற்பயிற்சி முடிந்ததும் வாழைப்பழம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.


அந்த வாழைப்பழத்துடன் வந்த பில்லில், இரண்டு பழங்களுக்கான விலை, 375 ரூபாய் எனவும், ஜி.எஸ்.டி வரி ரூ.67.50 எனவும் ஜி.எஸ்.டி.யோடு சேர்த்து ரூ. 442.50 என்றும் அச்சிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான ராகுல், தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவாகவே பதிவு செய்து விவரமாக வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.