புதுடெல்லி: 2022 இந்த ஒரு ராசிக்கு மிகவும் ஆபத்தானது, பொருளாதார இழப்பால் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் போகலாம். வரும் 2022ஆம் ஆண்டு புத்தாண்டு மகிழ்ச்சியைத் தருமா அல்லது பிரச்சனைகள் நிறைந்ததாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்படுவது இயல்பானது. சில ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். அதே சமயம் சில ராசிக்காரர்களுக்கு கவலைகளைத் தரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் 2022ஆம் ஆண்டு, துலாம் ராசிக்காரர்களுக்கு (Zodiac Signs) புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பண இழப்பைப் பற்றி யாரிடமும் சொல்லவேண்டாம், அது பிறரை உங்களிடமிருந்து விலக்கி வைக்க காரணமாகிவிடும். 
எப்போதாவது உங்களுக்கு அவமானம் நேர்ந்தால், அதைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம். அது அவர்கள் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உங்களுக்கு எதிராக மாறலாம்.  


துலாம் தொழில் மற்றும் பொருளாதாரம் 2022 
புதிய ஆண்டு தொழில் தொடர்பான சவால்கள் நிறைந்ததாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும். மேலும், கூட்டாண்மை வேலையில் பங்குதாரருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். இதனால் மன உளைச்சல் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகளுடன் பிரச்சனை ஏற்படலாம்.


ALSO READ | இந்த 4 ராசிக்காரர்களை மட்டும் சனி பகவான் அதிகம் படுத்துவார்: காரணம் என்ன? பரிகாரம் என்ன?


2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிதி நிலைமை நன்றாக இருந்தாலும், ஆண்டின் நடுப்பகுதியில் தேவையற்ற செலவுகளால் பண இழப்பு ஏற்படும். புதிய வேலை அல்லது கூட்டாண்மை வேலைகளில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். அது கணிசமான நிதி இழப்பு ஏற்படலாம்.


குடும்ப வாழ்க்கை
புத்தாண்டில் குடும்பத்தில் பொருளாதார பிரச்சனைகள் ஏற்படும். வேலையில் மும்முரமாக இருப்பதால் குடும்பத்திற்கு நேரம் கொடுக்க முடியாது. இதனால் வாழ்க்கைத்துணையுடன் விரிசல் அதிகரிக்கும். இது தவிர ராகு-கேதுவின் அசுப பலன்களால் உடல் நலத்திற்காக அதிக பணம் செலவிட வேண்டியிருக்கும்.  


காதல் வாழ்க்கை
காதல் வாழ்க்கைக்கு புத்தாண்டு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். திருமணமாகாதவர்கள் 2022ல் திருமணம் செய்து கொள்வார்கள். இல்லற வாழ்வில் இன்ப மகிழ்ச்சி உண்டாகும். புதிய காதலர்கள் தங்கள் காதல் துணையுடன் உரையாடலில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.


(பொறுப்புதுறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை)


ALSO READ | சனி பெயர்ச்சி; அதிக அதிர்ஷ்டத்தைப் பெற உள்ள ராசிகள் எவை 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR