திருமலை-திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 3 தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமாக திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ளது கோவிந்தராஜ சுவாமி கோயில் உள்ளது. இங்கு உற்சவ மூர்த்திகளான கல்யாண வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய மூர்த்திகளுக்கு அலங்கரிக்க பயன்படுத்தபடும் 3 தங்க கிரீடங்களை நேற்று மாலை முதல் காணவில்லை.


கோயிலில் பணியிலிருந்த அர்ச்சகர்கள் சிலர் கிரீடங்கள் காணாமல்போனது குறித்து, தேவஸ்தான உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து  கோயில் நிர்வாகம் புகாரின் பேரில் தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி பாஸ்கர், விஜிலென்ஸ் துறை அதிகாரி கோபிநாத் ஜெட்டி மற்றும் விஜிலென்ஸ் துறை அதிகாரிகள் ஆகியோர் நேற்று இரவு விசாரணையைத் துவக்கினர். மேலும் காவல் நிலைய போலீசார் ஆகியோரும் கோயிலுக்குள் சென்று விசாரணை நடத்தினர்.


கோவிந்தராஜ சாமி கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும், அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.  திருப்பதியில் தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளது பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.