அட்சய திருதியையில் 3 ராஜயோகங்கள்; இந்த நேரத்தில் ஷாப்பிங் செய்யுங்கள்
அட்சய திருதியை 2022 சுப முகூர்த்தம்: அட்சய திருதியை மிக முக்கியமான பண்டிகை. இந்த நாளில் மங்களகரமான வேலைகள் மற்றும் ஷாப்பிங் செய்ய ஒரு நல்ல நேரம் உள்ளது.
புத்தாண்டு பிறந்தவுடன் வரும் முக்கிய நல்ல நாட்களில் அட்சய திருதியையும் முக்கியமான ஒரு நாளாகும். இந்த நாளில்தான் கிருத யுகத்தில் பிரம்ம தேவன் உலகை உருவாக்கியதாக நம்பப்படுகின்றது. அட்சய திருதியை நாளில் விஷ்ணு பகவான் மற்றும் அன்னை லட்சுமியை வழிபடுகின்றனர். இதனுடன், இந்த நாளில் திருமணம், கிரக பிரவேசம், ஷாப்பிங் போன்றவற்றிற்கும் ஒரு நல்ல நேரம் உள்ளது. இந்த ஆண்டு மே 3 ஆம் தேதி செவ்வாய்கிழமை அதாவது நாளை இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தில் அட்சய திருதியை மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த நாள் திருமணம், புது மனை புகுதல், புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது, புதிய கலைகளை கற்கத் துவங்குவது, பத்திரப்பதிவு ஆகியவற்ருக்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது. அதாவது, இந்த நாளில் எந்த ஒரு சுப காரியத்தையும் நேரம் காலம் பார்க்காமல் செய்யலாம். அட்சய திருதியை அன்று 3 ராஜயோகங்கள் உருவாகியுள்ளதால் இம்முறை மேலும் சிறப்பு பெற்றுள்ளது.
அட்சய என்றால் அழியாதது. அட்சய திருதியை நாளில் செய்யும் செயல்கள் அழியாது அல்லது இந்த நாளில் செய்யும் செயல்கள் பல நன்மைகளைத் தரும் என்பது நம்பிக்கை. எனவே, இந்நாளில் புண்ணிய நதிகளில் நீராடுதல், வழிபாடு செய்தல், தானம் செய்தல், ஷாப்பிங் செய்தல் போன்றவற்றின் முக்கியத்துவம் அதிகம். இந்த நாளில், விஷ்ணு மற்றும் லட்சுமியை வழிபடுகிறார்கள், இதனால் அவர்களின் அருள் எப்போதும் நிலைத்திருக்கும். இதனுடன், தங்கம் மற்றும் வெள்ளி, வீடு-கார் போன்ற விலையுயர்ந்த பொருட்களை வாங்கவும் உகந்த நாள் இது, இதனால் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும்.
மேலும் படிக்க | Solar Eclipse: சூரிய கிரகணம் முடிந்த உடனே இதை செய்தால் பாதிப்பில் இருந்து விடுபடலாம்
அட்சய திருதியை அன்று ராஜயோகம் உண்டாகிறது
இந்த வருடம் மே 3ம் தேதி அட்சய திருதியை அன்று கிரகங்களின் நிலை மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. இதன் காரணமாக மாளவ்ய ராஜயோகம், ஹம்ச ராஜயோகம், சச ராஜயோகம் ஆகியவை இந்த நாளில் உருவாகின்றன. அட்சய திருதியை அன்று இந்த ராஜயோகங்கள் அமைவது மிகவும் மங்களகரமானது. இந்த ராஜயோகத்தில் எந்த ஒரு சுப காரியம் செய்தாலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
* அட்சய திருதியை அன்று காலை 05:39 முதல் மதியம் 12:18 வரை வழிபாடு செய்ய உகந்த நேரம்.
* அதே சமயம், தங்கம்-வெள்ளி, வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்கான சுப நேரம் காலை 05:39 மணி முதல் மறுநாள் காலை 05:38 மணி வரை இருக்கும்.
50 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய சுப நிகழ்வு
இந்த முறை அட்சய திருதியை ரோகிணி நட்சத்திரத்தின் ஷோபன யோகத்தில் கொண்டாடப்படும். இத்தகைய மங்களகரமான யோகம் கொண்ட அட்சய திருதியை 30 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது. மேலும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நாளில் கிரகங்களின் நிலையும் மிகவும் சிறப்பாக இருக்கும்.
அட்சய திருதியை அன்று சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷப ராசியிலும், சுக்கிரன் தனது உச்ச ராசியான மீன ராசியிலும் இருப்பார்கள். இது தவிர, சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்திலும், தேவகுரு வியாழன் தனது சொந்த ராசியான மீனத்திலும் இருப்பார்கள். அதாவது 4 கிரகங்கள் இப்படி அனுகூலமான நிலையில் இருப்பது மிகவும் விசேஷமானதாகவும், மங்களகரமானதாகவும் இருக்கும். இந்த சுப சேர்க்கைகளில் சுப காரியங்களைச் செய்வது நல்ல பலன்களைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சுக்கிரனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிர தசை, அனைத்திலும் வெற்றி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR