மோசமான வாழ்க்கை முறையில் மன அழுத்தம் ஒரு பகுதியாக மாறிவிட்டது. நீங்கள் மன அழுத்ததால் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தால், அதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் நாட்பட்ட கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாகலாம். உண்மையில், சிறிய விஷயங்களுக்கெல்லாம் அதிகம் கோபம் கொள்வது மன ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். இருப்பினும் சில யோகாசன பயிற்சிகள் மூலம் உங்களில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும். இந்த பயிற்சிகள் அனைத்தும் மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு ஆகிய பிரச்சனைகளில் இருந்து உங்களை மீட்டு கொண்டு வரும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மன அழுத்தம் ஒருவரை முழுதாக முடக்கிவிடும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகளே வராது. எதிர்மறை எண்ணங்கள் மனம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கும். கண்களுக்கு தெரிபவர்கள் எல்லோரும் எதிரிகளாக தெரிவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் வராது. இதனால் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த அறிகுறிகள் உங்களிடம் தென்பட்டால் மன அழுத்தம் இருப்பது உறுதியாகும். அதில் இருந்து மீண்டுவர இந்த யோகாசன பயிற்சிகளை தினமும் செய்யவும்.


மேலும் படிக்க | Uric Acid: எகிறும் யூரிக் அமிலத்தை விரட்டி அடிக்கும் சில மேஜிக் இலைகள்


மன அழுத்தத்தை குறைக்கும் யோகாசன பயிற்சிகள்


பலாசனா


பலாசனா மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளின் அபாயத்தை பெருமளவு குறைக்கும். பாலாசனா பயிற்சி செய்ய, வஜ்ராசனத்தில் அமர்ந்து முன்னோக்கி குனிய முயற்சிக்கவும். உங்கள் நெற்றியை தரையில் வைத்து 2 நிமிடங்கள் இந்த நிலையில் இருக்க முயற்சி செய்யுங்கள்.


ஸ்வனாசனா


உங்கள் மன ஆரோக்கியத்தை வலுப்படுத்த விரும்பினால், ஒவ்வொரு நாளும் அதோமுக ஸ்வனாசனா பயிற்சியைத் தொடங்குங்கள். மனதை அமைதிப்படுத்துவது முதல் மன அழுத்தத்தை குறைப்பது வரை, இந்த யோகா ஆசனம் உங்கள் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆசனத்தை பயிற்சி செய்ய, உங்கள் கைகள் மற்றும் கால்களால் ஒருசேர தரையில்படுமாறு குனிந்து, பின்னர் உங்கள் தலையை கீழே வைத்து உங்கள் இடுப்பை மேல்நோக்கி உயர்த்தவும்.


ஷவாசனா 


ஷவாசனா பயிற்சி செய்வது மிகவும் எளிது. இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்ய உங்களுக்கு அதிக நேரம் தேவைப்படாது. இந்த யோகாசனத்தால் உங்கள் மனம் அமைதி பெறும். வெறும் 5-10 நிமிடங்களுக்கு ஷவாசனா செய்ய, உங்கள் முதுகு தரையில் படுமாறு படுத்து, உங்கள் கைகளை தளர்வாக விட்டு ஆழ்ந்த மூச்சு பயிற்சியை செய்யவும். மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுவது, வேகமாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுவது போன்ற பயிற்சிகளை செய்யவும்.


மேலும் படிக்க | கீழே போடாதீர்கள்.. கறிவேப்பிலை சாப்பிட்டால் நடக்கும் 10 அதிசயம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ