7 ஆவது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. அவர்களது மாத ஊதியத்தில் ஒரு பம்பர் அதிகரிப்பு ஏற்படவுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் பல கொடுபனவுகள் உயர்த்தப்படவுள்ளன. இதனுடன் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வாய்ப்புகளும் உள்ளன. இவற்றை பற்றி விரிவாக காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் 14வது தவணை தொகை நாடு முழுவதும் உள்ள எட்டு கோடி விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கும் பல நல்ல செய்திகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. அகவிலைப்படியுடன், பல அலவன்ஸ்கள் உயர்த்தப்படுவது குறித்து மத்திய ஊழியர்களின் நம்பிக்கை நிறைவேற உள்ளது. நாடு முழுவதும் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகளையும் மத்திய அரசு விரைவில் பரிசீலிக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இதற்கிடையில், மத்திய அரசு தனது ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் பெரும் நிவாரணம் அளிக்கும்.  அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல பரிசுகளை விரைவில் அரசு வழங்கக்கூடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தும் நடந்தால், மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு பரிசுகளை ஒன்றன் பின் ஒன்றாக வழங்கக்கூடும் என ஊழியர்களும் ஊழியர் அமைப்புகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன. 


அகவிலைப்படி, அகவிலை நிவாரணத்தில் அதிகரிப்பு


நாட்டில் உள்ள சுமார் 1.75 கோடி மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வை மத்திய அரசு விரைவில் வழங்க உள்ளது. ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளின் அடிப்படையில், மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) இந்த முறையும் 4 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றனர். ஊழியர்களின் தற்போதைய அகவிலைப்படி 42 சதவிகிதமாக உள்ளது. இது 4 சதவிகிதம் அதிகரித்தால் மொத்த அகவிலைப்படி 46 சதவிகிதமாக உயரும்.  இது நடந்தால், அவர்களது தற்போதைய டிஏ 42 இல் இருந்து 46 சதவீதமாக உயரும். இதைத் தொடர்ந்து அவர்களது ஊதியத்தில் ஆண்டுக்கு ரூ. 8,000 முதல் ரூ. 27,000 வரை ஏற்றத்தை காண முடியும். 


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு அரசின் பரிசு... விரைவில் பல கொடுப்பனவுகளில் ஏற்றம்


வீட்டு வாடகை கொடுப்பனவு அதிகரிப்பு


அகவிலைப்படி உயர்வுடன், மத்திய அரசு ஊழியர்களுக்கான (எச்ஆர்ஏ) வீட்டு வாடகைப்படியும் அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசு கடைசியாக ஜூலை 2021 இல் ஊழியர்களின் வீட்டு வாடகைக் கொடுப்பனவில் திருத்தம் செய்தது. இத்தகைய சூழ்நிலையில், மத்திய அரசு விரைவில் தங்களின் வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) 3 சதவீதம் உயர்த்தலாம் என்ற நம்பிக்கையில் ஊழியர்கள் உள்ளனர். இது நடந்தால், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் நேரடியாக பயனடைவார்கள்.


ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிப்பு


நீண்ட காலமாக, மத்திய அரசு ஊழியர்களும், ஊழியர் அமைப்புகளும் ஃபிட்மென்ட் பேக்டரை அதிகரிக்கக் கோரி வந்தனர். அவர்களது இந்த கோரிக்கையை மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக ஊடகங்களில் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது மத்திய பணியாளர்களுக்கு 2.57 சதவீதம் என்ற விகிதத்தில் ஃபிட்மென்ட் பேக்டரின் பலன் கிடைத்து வருகின்றது. அதை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு பிட்மென்ட் ஃபாக்டரை 2.57ல் இருந்து 3.68 ஆக உயர்த்தினால், குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ. 18,000 -இல் இருந்து ரூ. 26,000 ஆக உயரும்.


நிலுவையில் உள்ள டிஏ அரியர் தொகை 


இதுமட்டுமின்றி, கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்குவதிலும் மத்திய அரசு பெரிய முடிவை எடுக்கலாம் என மத்திய அரசு ஊழியர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். மத்திய அரசு ஜனவரி 2020, ஜூன் 2020 மற்றும் ஜனவரி 2021 இல் ஒரே முறையாக 17 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தியது, ஆனால் அந்த நேரத்தில் ஊழியர்களுக்கு முடக்கப்பட்ட அகவிலைப்படி அரியர் தொகையை அரசு வழங்கவில்லை. மறுபுறம், கொரோனாவால் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டதில் இருந்து, ஊழியர் சங்கம் தொடர்ந்து 18 மாதங்களுக்கான டிஏ நிலுவைத் தொகையை அரசிடம் வழங்கக் கோரி வருகிறது. இது நடந்தால், மத்திய ஊழியர்கள் 2,00,000 ரூபாய் வரை பலன் பெறலாம். கடந்த காலங்களில் பல முறை டிஏ நிலுவைத் தொகையை வழங்க மத்திய அரசு மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த அனைத்து அலவன்ஸ்களும் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த பிறகு, அவர்களது மாத ஊதியத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். அவர்களது டேக் ஹோம் ஊதியமும் கணிசமாக அதிகரிக்கும். 


மேலும் படிக்க | 8th Pay Commission: டிஏ 50%, ஆனால்.... மத்திய அரசு கொடுத்த ஷாக், அதிர்ச்சியில் ஊழியர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ