வீடுகளில் சமைத்தால் கூட இந்த 4 உணவுகள் ஆரோகியமானவை அல்ல - எச்சரிக்கை
Homemade foods | வீட்டில் சமைக்கிற உணவுகள் எல்லாமே ஆரோக்கியமானதா? என்றால் இல்லை. இந்த நான்கு உணவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Homemade foods Tamil | ஆரோக்கியமான உணவுகள் என்றால் வீட்டில் சமைக்கிற உணவுகள் தான் என்ற பொதுப்புத்தி இருக்கிறது. ஆனால், எல்லா உணவுகளும் வீட்டில் ஆரோக்கியமாக சமைக்கப்படுவதில்லை என்பதும் ஒப்புக் கொள்ள வேண்டும். வீட்டில் சமைத்த உணவுகள் (Homemade foods) ஏன் ஆரோக்கியமில்லை என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த 4 உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
எண்ணெய், நெய் அதிக உபயோகம்
உணவுகளை வீட்டிலேயே சமைத்தாலும் அதில் அதிக எண்ணெய், வெண்ணெய், நெய் எலாம் அதிகம் சேர்த்தால் அவை ஆரோக்கியமற்ற உணவுகளே. அதிகப்படியான எண்ணெய், வெண்ணெய் சேர்ப்பு சுவையை அதிகரித்தாலும் கொழுப்பு சத்தை உடலில் அதிகரித்துவிடும். தேவையற்ற கலோரிகள் அதிகமாவதுடன், ஆரோக்கியமற்ற கொழுப்பும் வீட்டு உணவு உண்பதால் அதிகரிக்கும்போது, அந்த உணவுகள் எப்படி ஆரோக்கியமான உணவுகளாக இருக்க முடியும். கூடுதலாக இப்படி சமைத்து சாப்பிடும் உணவுகள் எடையை அதிகரிக்கவும் செய்யும்.
சர்க்கரை அதிகம் சாப்பிடுதல்
தினமும் காலை, மாலை டீ, காபி சாப்பிடுவது இந்தியா முழுவதும் ஒரு பழக்கமாகவே இருக்கிறது. கூலி வேலைக்கு செல்பவர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு நான்கு முதல் 6 முறை டீ காபியை சாப்பிடுவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதில் சுவைக்காக கூடுதலாக சர்க்கரையும் சேர்த்துக் கொள்கிறார்கள். அதிகப்படியான சர்க்கரை நுகர்வு தேவையில்லாமல் நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கும். அதேநேரத்தில் வீட்டில் செய்யப்படும் இனிப்புகளிலும் கூடுதலாக சர்க்கரை சேர்த்துக் கொள்கிறார்கள். வீட்டில் சமைத்தாலும், இவற்றை சாப்பிடுவது ஆபத்தானது தான்.
உப்பு சேர்த்த உணவுகள்
சர்க்கரை எப்படி அதிகமாகும்போது உடலுக்கு ஆபத்து வருகிறதோ, அதைப்போலவே உப்பு அதிகமானாலும் ஆபத்து தான். தயிர் போன்றவற்றை அப்படியே உணவில் சேர்த்து சாப்பிடும்போது கூடுதலாக உப்பு சேர்த்துக் கொள்கிறோம். கூடுதலாக ஊறுகாய், எண்ணெய்யில் பொறித்த வடை, சட்னி ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்கிறோம். சுவைக்காக இவற்றிலும் அதிகப்படியான உப்புகள் சேர்க்கப்படுகின்றன. ஆனால், தினசரி உப்பு அதிகம் கொண்ட உணவு பதார்த்தங்களை சாப்பிடுவது சிறுநீரகம், கல்லீரலுக்கு ஆபத்து. எனவே, இப்படியான உணவுகளும் வீட்டில் சமைத்து சாப்பிட்டாலும் ஆபத்தான உணவுகள் தான்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகம் வீட்டு உணவுகளில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. கடையில் சாஸ்கள், சிரப் ஆகியவற்றை சாப்பிடாமல் தவிர்த்துவிட்டு, வீட்டில் அவற்றை சாப்பிடுவது மட்டும் எப்படி ஆரோக்கியமானதாக இருக்கும். மைதாவில் செய்யப்படும் கேக்குகள், அதனை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது, அதேபோல் ஆரோக்கியமானது என நினைத்து முழு தானியங்களில் செய்யப்படும் இனிப்பு பதார்த்தங்கள் கூட உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல.
வீடுகளில் சமைத்தாலும் ஆரோக்கியமான உணவுகளை சமைத்து சாப்பிட்டால் மட்டுமே அவை ஆரோக்கியத்தை கெடுக்காமல் இருக்கும். கடைகளில் சமைக்கப்படுவதற்காக நல்ல உணவுகள் கெட்டவையும் அல்ல, வீடுகளில் சமைப்பதால் ஆரோக்கியமில்லாத உணவுகள் நல்ல உணவுகளும் அல்ல. அதனால் உங்கள் ஆரோக்கியத்துக்கு எந்த உணவு தேவையோ அதனை சமைத்து சாப்பிடுவது மட்டுமே நல்லது. சில உணவுகளை வீடு, கடை என எங்கும் சாப்பிடாமல் இருப்பதே இன்னும் நல்லது.
மேலும் படிக்க | கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கும் சாறுகள்: கண்டிப்பா குடிங்க
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | முள்ளங்கி சாப்பிட்டால் வாயு நீங்கும், பிபி குறையும், பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ