Nayanthara Lifestyle Tips : லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வரும் நடிகை நயன்தாரா சினிமா துறையில் 21 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இந்த காலக்கட்டத்தில் பல கடினமான சூழல்களை எதிர்கொண்டபோதும் சோர்ந்துவிடாமல் இன்னும் வெற்றிகரமாக திகழ்கிறார். அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொழிலில் கவனம்


நடிகை நயன்தாரா தொழில் என்று வந்துவிட்டால் மிகவும் சின்ஷியராக இருப்பார். ஒப்புக் கொண்ட விஷயத்தில் எக்காரணத்தைக் கொண்டும் பின் வாங்காத அவர், தனக்கென ஒரு ரூட்டை அமைத்துக் கொண்டார். நடிகைகள் எல்லோரும் பிரபலமான நடிகர்களுடன் நடிக்க விரும்பும் நிலையில், அன்றைய மார்க்கெட்டில் யார் பிரபலமாக இளம் நடிகர்கள் வளர்ந்து வருகிறார்களோ, அவர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் பார்முலாவை கொண்டிருக்கிறார். இது அவருக்கு வெற்றியையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சீனியர் ஜூனியர் என்ற விஷயத்துக்கே போகமாட்டார். இதனாலேயே நயன்தாரா இன்றும் முன்னணி நடிகையாக இருக்கிறார். 


மேலும் படிக்க | சூர்யா-ஜோதிகா காதலில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 6 பாடங்கள்!!


அடிக்கடி சுற்றுலா


நயன்தாராவிடம் இருக்கும் பழக்கமே அடிக்கடி சுற்றுலா செல்வது தான். அவர் ஒப்புக்கொண்ட விஷயங்கள் எல்லாம் முடித்துவிட்டார் என்றால் உடனடியாக ஏதாவதொரு வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுவிடுவார். ரிலாக்ஸாக இருக்கும்போது தான் புதுப்புது விஷயங்களில் கவனம் செலுத்த முடியும். டிரெண்டிங் விஷயங்களை சரியாக கணிப்பதற்கும், தான் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனமும் செலுத்த முடியும். அதற்காகவே நயன்தாரா அடிக்கடி சுற்றுலா செல்கிறார்.


விமர்சனங்களுக்கு ரியாக்ஷன்


நடிகை நயன்தாரா ஆரம்பக்கட்டங்களில் விமர்சனங்களை எல்லாம் தவறாமல் படித்து வந்தாராம். பின்னர் வேலை சரியாக செய்தால் விமர்சனங்களும் சரியாக தானே வரும் என்று முடிவெடுத்து அன்று முதல் வேலையை சரியாக செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி விமர்சனங்களை படிப்பதை முழுவதுமாக நிறுத்திவிட்டாராம். இதுகுறித்து நடிகை நயன்தாரா ஒருமுறை பேசும்போது, பிறர் என்ன சொல்கிறார்கள் என்று கவனித்தால், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை மறந்துவிடுவோம். நம்மை காயப்படுத்தக்கூடிய எந்த விஷயத்துக்கும் கவனம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார். 


குடும்பம்


நடிகை நயன்தாரா தன்னுடைய குடும்பத்தை பொது வெளிக்கு அழைத்து வந்ததே இல்லை. சினிமாவில் இவர் நடிக்க வந்தால் ஆரம்பத்தில் அவர் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக நயன்தாராவின் அப்பா பல ஆண்டுகள் நயன்தாராவிடம் பேசவில்லை. பின்னர் ஒருவழியாக சமரசம் ஆனதாக நயன்தாரா பேட்டி ஒன்றில் தெரிவித்தார். எவ்வளவு எதிர்ப்பு வந்தபோதும், சினிமாவில் நடிப்பதை அவர் நிறுத்தவே இல்லை. பிடிக்கும் ஒரு விஷயத்துக்காக குடும்பத்தின் எதிர்ப்பைக் கூட பொருட்படுத்தாமல் இருந்து வெற்றியும் பெற்று காண்பித்திருக்கிறார். 


பேஷன் ஸ்டைல்


சினிமாவுக்கு வந்தபிறகு பேஷன் மற்றும் ஸ்டைல் உடைகளில் கவனம் செலுத்த வேண்டியது நயன்தாராவுக்கு அவசியமாகிவிட்டது. அவருக்கும் தன்னை அழகாக வைத்துக் கொள்வது ரொம்ப பிடிக்குமாம். குறிப்பாக பாரம்பரிய உடைகள் அணியும்போது கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறியுள்ள நயன்தாரா, ஒருவருக்கு எந்த துணி ஓகே என தோன்றுகிறதோ அதனை போட்டுக் கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார். 


மேலும் படிக்க | வினேஷ் போகத் மட்டுமல்ல, பொதுவாகவே பெண்களுக்கு எடை சீக்கிரம் அதிகரிக்க காரணங்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ