ஒரே வாரத்தில் அடிவயிறு தொப்பை கொழுப்பு குறைய 5 சிம்பிள் உடற்பயிற்சிகள்..!
Belly Fat Loss Tips | தொப்பை கொழுப்பு ஆரோக்கியத்துக்கு மிக்கப்பெரிய பிரச்சனை என்பதால் ஒரே வாரத்தில் அடிவயிறு தொப்பை குறைக்கும் உடற்பயிற்சிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Belly Fat Exercises | தொப்பை கொழுப்பு ஆபத்தானது. அடிவயிற்றில் சேரும் கொழுப்பு பல ஆரோக்கிய பிரச்சனைகளை கொண்டு வந்துவிடும். ஆனால் சில உடற்பயிற்சிகளை செய்தால் ஒரே வாரத்தில் அடிவயிறு தொப்பையை குறைத்துவிடலாம். ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் விட்டால் உடல் உள்ளுறுப்புகளை சுற்றியிருக்கும் கொழுப்பு டைப் 2 நீரிழிவு நோய், இதய நோய், புற்றுநோய் போன்ற உயிர்கொல்லி நோய்களை ஏற்படுத்த வழிவகுத்துவிடும். அதனால் ஆரம்பத்திலேயே கொழுப்பை குறைக்கும் உடற்பயிற்சிகளை செய்ய துவங்குங்கள்.
அடிவயிறு பயிற்சி
இந்த பயிற்சி மிகவும் எளிதானது. வீட்டிற்குள்ளேயே செய்துவிட முடியும். தரையில் விரிப்பை விரித்துக் கொள்ளுங்கள். அதில் நேராக கால்களை நீட்டி படுத்துக் கொள்ளுங்கள். இரு கைகளையும் தலைக்கு பின்னால் வைத்து இணைத்து பிடித்துக் கொள்ளுங்கள். இப்போது இரு கால்களையும் உங்களால் முடிந்த அளவுக்கு நேராக மேலே படிப்படியாக உயர்த்தவும். கிடை மட்டத்துக்கு மேலே காலை உயர்த்திய பிறகு, இப்போது உடலை மேல் நோக்கி உயர்த்தி முழங்கால் மீது உங்கள் முகம் படுமாறு வளைக்கவும். சுமார் 5 எண்ணும் வரை அந்த நிலையில் இருந்துவிட்டு இயல்பு நிலைக்கு திரும்பவும். தொடர்ந்து 10 முறை இப்படியே செய்யவும்.
இடுப்புக்கான பயிற்சி
கால்களை இரண்டையும் அகலமாக வைத்து நின்று கொள்ளுங்கள். கைகளை மேலே உயர்த்தியவாறு, உட்காரவும். பின்னர் முன்னோக்கி கைகளை தரையில் ஊன்றிக் கொள்ளவும். உடலை நீள வாக்கில் வைத்துக் கொண்டு கை, மற்றும் கால்களின் பேலன்ஸில் உடலை மேலே உயர்த்தவும். அதாவது தண்டால் எடுக்கும் நிலையில் இருப்பீர்கள். எப்படி கீழே வந்தீர்களோ அந்த நிலைகளை பின்பற்றி இப்போது மேலே எழுந்து நிற்கவும். சிம்பிளான பயிற்சி என்றாலும் 10 செட் என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக செய்தால் அடிவயிறு தொப்பை குறையும்.
போட் போஸ் பயிற்சி
இந்த பயிற்சி முதல் உடற்பயிற்சியை போன்றது என்றாலும் கொஞ்சம் வேறுபட்டது. அந்த பயிற்சியில் கீழே படுத்து காலை உயர்த்தி முழங்கால் மீது முகத்தை படுமாறு பயிற்சி செய்திருப்பீர்கள். இதில், முழங்காலில் முகம் பட தேவையில்லை. மாறாக கால்கள் உயர்ந்திருக்கும்போது இடுப்பு பேலன்ஸில் உடலை உயர்த்தி சில நொடிகள் அப்படியே இருக்க வேண்டும். 10 செட், 15 செட் என பிரித்து இந்த பயிற்சியை செய்தால் அடிவயிறு தொப்பை குறைப்பதில் சூப்பர் பலன்கள் கிடைக்கும்.
மலையேற்றம்
அடிவயிறு தொப்பையை சீக்கிரம் குறைக்க வேண்டும் என்றால் மலையேற்றம் செய்யலாம். ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் என செங்குத்தான பகுதிகளில் ஏறி இறங்க வேண்டும். தொடர்ச்சியாக இந்த பயிற்சியை நீங்கள் செய்தால் உங்களின் அடிவயிறு தொப்பை வேகமாக குறைந்துவிடும்.
உணவு பட்டியல்
அடிவயிறு தொப்பை குறைக்க வேண்டும் என்ற முயற்சியில் இருப்பவர்கள் நிச்சயம் உணவில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெய் பலகாரங்கள், இனிப்புகள், பொறித்த உணவுகள் ஆகியவற்றை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும். எப்போதும் நன்கு சமைத்த உணவுகளையும், தயிர் மோர் போன்ற புரோபயாடிக் உணவுகளை சரியான விகிதத்திலும் எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறி, கீரைகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ