நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களில் 5,606 ஆசிரிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடுமுழுவதிலும் உள்ள மத்திய பல்கலை கழகங்களில் 5,606 ஆசிரிய பணியிடம் காலியாக இருப்பதாகவும், இதில் IIT கல்லூரிகளில் மட்டும் 2,806 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேப்போல் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரிகளில் 1870 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், இந்திய மேலாண்மை நிறுவனத்தில் 258 பணியிடங்கள் காலியாக இருப்பதாவும் தெரிகிறது.


"ஆசிரியர்களின் வெளியேற்றத்தாலும், மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பதாலும் தொடர்சியாக ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதும் தொடர்ச்சியான செயலாக மாறியுள்ளது" என மூத்த மனிதவள அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


"மாணவர்களின் ஆய்வுகள், ஆராய்ச்சியாளர்களுக்கான ஒப்பந்தம் ஆகியன இத்தகு பணியிட இணைத்தல் போன்ற காரியங்களால் பாதிக்கப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


ஆசிரியர்கள் பற்றாக்குறையை முறைப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் வெளியேறும் ஆசிரியர்களை ஈர்ப்பதற்காக பல நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மத்திய பல்கலை., காலியிடங்களை தவிர பல கல்லூரிகளிலும் நாடுமுழுவதும் ஆசிரிய பணியிடம் காலியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வகையில் ஸ்கூல் ஆஃப் பிளானிங் அண்ட் ஆர்கிடெக்சர் (SPA)-ல் 96 பணியிடங்கள், இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (IISC)-ல் 88 பணியிடங்கள், இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் மற்றும் ஆராய்ச்சியில் பிரவில் 100 பணியிடங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!