Actor Vijay Self Confidence Tips : தமிழ் திரையுலகில் எத்தனையோ பிரபலங்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்குமே தனித்தனி சிறப்பம்சங்கள் இருக்கின்றன. அப்படி, தனித்துவமான குணங்கள் நிறைந்தவர், நடிகர் விஜய். இவரிடம் மக்களுக்கு பிடித்த விஷயங்களுள் ஒன்று, தன்னம்பிக்கை. நம்மில் பலருக்கு இந்த தன்னம்பிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதை வளர்த்துக்கொள்ள நாம் விஜய்யிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.கடின உழைப்பு:


வாழ்வில் முன்னேற வேண்டும் என்றால், நமக்கு தன்னம்பிக்கையை தவிர வேறு எதுவுமே கைக்கொடுக்காது. இதை, முழு மனதுடன் நம்புபவர் விஜய். தந்தையால் திரையுலக வாய்ப்பு எளிதாக கிடைத்திருந்தாலும், பெரிய இடத்தை அடைவதற்காக இவர் கடின உழைப்பை மேற்கொண்டிருக்கிறார். இந்த உழைப்பு, உங்களை தனி மனிதராக உயர்த்துவதோடு மட்டுமன்றி, தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். 


2.சுயத்தோடு இருப்பது:


விஜய், எந்த இடத்திற்கு சென்றாலும் தனது சுயத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பாராம். இதுவே இவரது ரசிகர்களை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த பிடித்தத்தை இழக்க செய்யாமல் இருக்கிறது. இதுவே, இவரது தனித்துவமான குணமாகவும் உள்ளது. 


3.தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ளுதல்:


வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக முயற்சி செய்து, தோற்றுப்போகத்தான் வேண்டும். விஜய்க்கும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் பல்வேறு தோல்விகள் கிடைத்திருக்கிறது. ஆனால், ஒரு முறை செய்த தவறை அடுத்த முறை செய்து விடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கும் விஜய், தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அதிலிருந்து மீண்டு எழுந்து, இன்று பெரிய ஸ்டாராக இருக்கிறார். 


மேலும் படிக்க | உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கை வளர... நீங்கள் செய்ய வேண்டியவை..!!



4.தெளிவான இலக்குகள்:


நமக்கு ஒரு இலக்கு இருக்கிறது என்றால், அதை நோக்கி ஓடும் போது நமது பார்வையும் தெளிவாக இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் தன்னம்பிக்கையுடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க இயலும். இந்த தன்னம்பிக்கை, நமக்கு வெற்றிக்கான பாதையையும் வகுத்துக்கொடுக்கும். விஜய், தான் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கும் மனிதர்களுள் ஒருவர். அது சினிமா வாழ்க்கையாக இருந்தாலும் சரி, அரசியல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி. 


5.பாசிடிவான அணுகுமுறை:


நாம் கடினமான தருணங்களை கடந்து வந்த பிறகு வாழ்க்கை, நமக்கு நல்ல விஷயங்களை கொடுக்கும். அப்போதும், நாம் கையில் இருப்பதை குறைக்கூறிக்கொண்டு இருக்க கூடாது. அப்படி செய்தால் கையில் இருக்கும் விஷயங்களும் பறிப்போய்விடும். விஜய்யின் பேச்சில் இருந்தே அவர் தன் வாழ்க்கையை எப்படி அணுகுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இவர் அனைத்தையும் நேர்மறை உணர்வுடன் பார்ப்பது, இவர் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல, இவரை சுற்றி இருப்பவர்களின் முன்னேற்றத்திற்கும் உதவுகிறது.


6.நம்பிக்கைக்குரியவர்கள்:


நாம் மட்டுமே தனித்து இருப்பது நமது உலகத்தில்தான் என்றாலும், எப்போதாவது சுற்றி இருப்பவர்களின் ஆதரவும் நமக்கு தேவைப்படும். அவர்கள், நம் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், நமது வெற்றியை பார்த்து மகிழ்ச்சியடையும் ஆளாகவும் இருக்க வேண்டும். 


விஜய், எப்போதும் ஊடகத்தின் பார்வையிலேயே இருந்தாலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விஷயங்கள் பெரிதாக யாருக்கும் வெளியில் தெரியாது. காரணம், அவர் அவ்வளவு நம்பிக்கைக்குரிய ஆட்களை உடன் வைத்திருக்கிறார்.



 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ