Qualities Of A Good Husband : திருமண உறவில் காதலை தாண்டி நிறைய விஷயங்கள் தேவைப்படுகின்றன. புரிதல், மரியாதை, உறவை தக்க வைத்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிகள் என இவை அனைத்தும் அதில் அடங்கும். ஒரு நல்ல கணவராக இருக்க வேண்டும் என்றால், அதற்கு சில நல்ல குணாதிசயங்கள் இருப்பது மிகவும் அவசியம் ஆகும். அவை என்னென்ன தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்பு திறன்:


ஒரு நல்ல கணவன் தன் மனைவியுடன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேசும் திறனை பெற்றவராக இருக்கிறார். பேசுவது மட்டுமல்ல, பல சமயங்களில் காது கொடுத்து கேட்கும் திறனும் அவரிடத்தில் இருக்கும். தனது மனைவி கூற வரும் விஷயத்தை காது கொடுத்து கேட்டு, அதை புரிந்துணரும் தன்மையையும் அவர் கொண்டிருப்பார். இப்படி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக்கொள்வது அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை எளிதில் தீர்க்க வழிவகுக்கும். இருவருக்குள் இருக்கும் உறவும் வலுவாகும். 


ஆதரவு-உந்துதல்:


நல்ல கணவர், தனது மனைவியின் அனைத்து கட்டங்களிலும் அவள் கூடவே இருப்பார். தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள, தொழில் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள, உணர்வு ரீதியாக நேரும் துன்பங்களை எதிர்கொள்ள என அனைத்திற்கும் கூடவே நிற்பார். தன் மனைவி எதை சாதிக்க நினைக்கிறாரோ, அதற்கான வெற்றிப்பாதையில் அவர் செல்கையில் கூடவே இருந்து மோட்டிவேட் செய்வார்.


மரியாதை:


வாழ்வில், எந்த உறவாக இருந்தாலும் அதில் ஒருவர் மீது ஒருவர் அதிகளவில் மரியாதை வைத்திருக்க வேண்டும். நல்ல கணவர், தனது மனைவி கூறும் கருத்துகளுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றாலும் மரியாதை கொடுப்பார். பிறரின் உணர்வுகள் மற்றும் எண்ணங்களுக்கு மரியாதையும் மதிப்பும் கொடுப்பது ஒரு நல்ல மனிதருக்கான அடையாளம் ஆகும். இப்படிப்பட்ட நல்ல மனிதராக அவர் இருக்கிறார் என்றால், நல்ல கணவராகவும் இருப்பார் என்று அர்த்தம்.



நம்பகத்தன்மை:


நம்பிக்கையும், நமபகத்தன்மையும் மட்டுமே ஒரு நல்ல உறவுக்கு அடித்தளமாக அமைகிறது. ஒரு நல்ல கணவர், சுற்றி இருப்பவர்களுக்கு உண்மையாக இருப்பது மட்டுமன்றி, தனது மனைவிக்கும் உண்மையாக இருப்பார். தனது சத்தியங்களை பாதுகாத்து, தான் கூறிய விஷயங்களை செய்து முடிப்பது அவரது நல்ல குணமாக இருக்கும். தனது பார்டனரின் நம்பிக்கைக்கு உண்மையாக இருப்பது மட்டுமன்றி, வாய்மொழி மூலம் மட்டும் உண்மையாக இருக்கிறேன் என்று கூறாமல், அவ்வாறே வாழ்ந்து காட்டுவார்.


மேலும் படிக்க | கணவன்-மனைவி சண்டை போட்ட பின் சமாதானம் ஆவது எப்படி? சிறப்பான டிப்ஸ்!


காதல் மற்றும் நெருக்கம்:


ஒரு திருமண உறவில், எந்த அளவிற்கு காதல் இருக்கிறதோ அவ்வளவு காலம் அந்த உறவு நிலைத்து நிற்கும். கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல், நல்ல வார்த்தைகளை கூறுதல் என பல்வேறு வகைகளில் நல்ல கணவராக இருப்பவர் தனது காதலை வெளிப்படுத்துவார். நெருக்கத்தையும், காதலையும் எப்படி திருமண உறவில் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு நல்ல கணவருக்கு தெரியும். 


பகிரப்பட்ட பொறுப்புகள்:


ஒரு வீட்டை நிர்வாகம் செய்வது என்பது, வெறும் மனைவியின் பொறுப்பு மட்டுமல்ல, கணவரின் பொறுப்பும்தான். விட்டு வேலைகள், நிதி மேலாண்மை, பிள்ளைகளை கவனித்தல் உள்ளிட்ட அனைத்துமே இருவருக்கும் ஏற்றது ஆகும். ஒரு நல்ல கணவராக இருப்பவர், இது போன்ற பொறுப்புகளை தாமாக முன் வந்து ஏற்றுக்கொள்பவராக இருப்பார். இது, அந்த திருமண உறவை சரியான நிலையில் கொண்டு செல்வதாக இருக்கும். 


உணர்ச்சிகள் குறித்த அறிவு:


ஒருவரின் படிப்பறிவு மட்டும், அவர் அறிவாளியா என்பதை நிரூபித்து விடாது. தனது மனைவியின் உணர்ச்சியை, அவர் மனதை எந்த கணவர் புரிந்து கொள்கிறாரோ, அவரே அறிவாளியான கணவர் ஆவார். ஒரு நல்ல கணவர், தனது மனைவியின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடப்பவராக இருப்பார். அவர் கோபமாக இருக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், அவர் சோகமாக இருக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரிய வேண்டும். அப்போதுதான் அந்த உறவு நிலைத்து நிற்கும். 


மேலும் படிக்க | 1-1-1-1 விதி... கணவன், மனைவி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய பாடம் - உறவில் சண்டையே வராது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ