7வது ஊதியக்குழு புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய செய்தி இது. அகவிலைப்படி கணக்கீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அகவிலைப்படியை கணக்கிடுவதற்கான சூத்திரத்தை மாற்றியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகவிலைப்படியின் அடிப்படை ஆண்டு (பேஸ் இயர்) 2016 ஆக மாற்றப்பட்டது. அமைச்சகமானது ஊதிய விகிதக் குறியீட்டின் (WRI-Wage Rate Index) புதிய தொடரை வெளியிட்டுள்ளது. 1963-65 அடிப்படை ஆண்டின் பழைய தொடருக்கு பதிலாக, 2016=100 உடன் WRI-ன் புதிய வரிசை மாற்றப்படும் என்று தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, இப்போது அகவிலைப்படியை கணக்கிடும் முறை மாறிவிட்டது.


அரசாங்கம் அடிப்படை ஆண்டை மாற்றுகிறது


குறிப்பிடத்தக்க வகையில், பணவீக்க தரவுகளின் அடிப்படையில், முக்கிய பொருளாதார குறிகாட்டிகளுக்கான அடிப்படை ஆண்டை அரசாங்கம் அவ்வப்போது திருத்துகிறது. இது பொருளாதாரத்தில் வரும் மாற்றங்கள் மற்றும் தொழிலாளர்களின் ஊதிய முறை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் செய்யப்படுகிறது. 


மேலும் படிக்க | 7th Pay Commission: மாத இறுதிக்குள் 2 குட் நியூஸ்? காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் 


சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO), தேசிய புள்ளியியல் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, நோக்கத்தை விரிவுபடுத்தவும், குறியீட்டை மேலும் திறமையாக மாற்றவும், ஊதிய விகிதக் குறியீட்டின் அடிப்படை ஆண்டு 1963-65 இலிருந்து 2016 ஆக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அகவிலைப்படி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?


வழக்கமாக 6 மாதங்களுக்கு ஒருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி மாற்றப்படும். அப்போதைய அகவிலைப்படி விகிதத்தை அடிப்படை ஊதியத்துடன் பெருக்கி அகவிலைப்படியின் அளவு கணக்கிடப்படுகிறது.


அகவிலைப்படி என்றால் என்ன?


அகவிலைப்படி என்பது, அன்றாட வாழ்க்கைச் செலவுக்காக ஊழிர்களின் செலவு செய்யும் திறனை (Cost of Living) மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் தொகையாகும். பணவீக்கம் உயர்ந்தாலும், ஊழியர்களின் வாழ்க்கை நிலை பாதிக்கப்படாமல் இருக்க, இந்தப் தொகை ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த தொகை அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.


ALSO READ | 7th Pay Commission முக்கிய அப்டேட்: ரூ. 1,44,200 வரை அரியர் தொகை கிடைக்கும், விவரம் இதோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR