7th Pay Commission முக்கிய அப்டேட்: ரூ. 1,44,200 வரை அரியர் தொகை கிடைக்கும், விவரம் இதோ

பிரதமர் மோடி 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகைக்கு கிரீன் சிக்னல் கொடுத்தால், சுமார் 1 கோடி மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் பெரும் தொகை வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 30, 2021, 09:38 AM IST
  • மத்திய ஊழியர்களுக்கு ஒரு நிம்மதியான செய்தி விரைவில் வரக்கூடும்.
  • 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்த எதிர்பார்ப்பு இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
  • விரைவில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7th Pay Commission முக்கிய அப்டேட்: ரூ. 1,44,200 வரை அரியர் தொகை கிடைக்கும், விவரம் இதோ title=

7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு ஒரு நிம்மதியான செய்தி விரைவில் வரக்கூடும். ஊழியர்களின் 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்த எதிர்பார்ப்பு இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆனால் விரைவில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகைக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, ஊழியர்களின் கணக்கில் வரக்கூடும் தொகை என்ன என்பதை இந்த பதிவில் காணலாம். 

மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி

7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு, ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படியோடு, கூடுதலாக இன்னும் பல நன்மைகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அகவிலைப்படி நிலுவை தொடர்பாக 18 மாதங்களாக முடிவு எடுக்கப்படாமல் உள்ளது. ஜாயிண்ட் கன்சல்டேடிவ் மெஷினரியின் தேசிய கவுன்சிலின் (ஜேசிஎம்) செயலாளர் (பணியாளர் தரப்பு) சிவ கோபால் மிஸ்ரா கூறுகையில், அகவிலைப்படி முடக்கம் நீக்கப்பட்ட  அதே வேளையில், 18 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி (Dearness Allowance) பாக்கிகளை ஒரே முறையில் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கவுன்சில் அரசாங்கத்தின் முன் வைத்துள்ளது என்றார். 

ஜே.சி.எம். தேசிய கவுன்சில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) நிதி அமைச்சகத்துக்கு இடையே நிலுவைத் தொகை குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், உறுதியான முடிவு எதுவும் அப்போது எடுக்கப்படவில்லை. எனினும், ஊழியர்கள் தங்கள் கோரிக்கையில் இன்னும் உறுதியாக உள்ளனர். இது தொடர்பான அரசுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 

ALSO READ | 7th Pay Commission: ஜனவரியில் மீண்டும் அதிகரிக்கிறது அகவிலைப்படி, சம்பளம் எவ்வளவு உயரும்?

எப்படியும், விரைவில் இது குறித்து அமைச்சரவை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. செலவினத் துறையின் ஆண்டு அறிக்கையின்படி, நாட்டில் மொத்தம் 48 லட்சம் மத்திய ஊழியர்களும், சுமார் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர்.

2 லட்சத்துக்கும் மேல் அரியர் தொகை கிடைக்கும்

JCM இன் தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ராவின் கூற்றுப்படி, லெவல்-1 ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும். லெவல்-13 (7வது CPC அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ. 2,15,900) அல்லது லெவல்-14 (ஊதிய அளவு) ஆகியவற்றுக்கு கணக்கீடு செய்தால், இந்த ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகையாக ரூ. 1,44,200 முதல் ரூ. 2,18,200 வரை கிடைக்கும்.
 
அகவிலைப்படி அரியர் தொகை எவ்வளவு கிடைக்கும்? 

- குறைந்தபட்ச கிரேட் பே ரூ. 1800 (லெவல்-1 அடிப்படை ஊதிய அளவு ரூ.18000 முதல் ரூ.56900 வரை) உள்ள மத்திய ஊழியர்கள் ரூ. 4320 [{18000 இல் 4 சதவீதம்} X 6]-க்காக காத்திருக்கின்றனர்.

- [{4 சதவீதம் 56900}X6] என்ற கணக்கீட்டில் இருக்கும் ஊழியர்கள் ரூ. 13,656 என்ற தொகைக்கு காத்திருக்கிறார்கள். 

- 7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச கிரேட் பேவில் 2020 ஜூலை முதல் டிசம்பர் வரை ரூ. 3,240 [{3 சதவீதம் 18,000}x6] என்ற அளவில் அகவிலைப்படி நிலுவைத் தொகையைப் பெறுவார்கள்.

- [{3 சதவீதம் ரூ. 56,9003}x6] என்ற கணக்கீட்டில் உள்ளவர்களுக்கு ரூ.10,242 கிடைக்கும்.

- ஜனவரி மற்றும் ஜூலை 2021 க்கு இடைப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையைக் கணக்கிட்டால், அது 4,320 [{4 சதவீதம் ரூ. 18,000}x6] ஆக இருக்கும்.

- [{4 சதவீதம் ₹56,900}x6] என்ற கணக்கீட்டுக்கு தொகை ரூ.13,656 ஆக இருக்கும்.

நிலுவைத் தொகை குறித்து பிரதமர் மோடி முடிவு செய்வார்

18 மாத நிலுவைத் தொகை குறித்த விவகாரம் பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இதைப் பற்றிய முடிவை பிரதமர் மோடி எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எதிர்பார்ப்பு, நிலுவைத் தொகை குறித்த மத்திய ஊழியர்களின் நம்பிக்கையை மீண்டும் அதிகரித்துள்ளது. 

பிரதமர் மோடி 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகைக்கு கிரீன் சிக்னல் கொடுத்தால், சுமார் 1 கோடி மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் பெரும் தொகை வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது மத்திய ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படி 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுகின்றனர்.

ALSO READ | மத்திய ஊழியர்களுக்கு நல்ல செய்தி! யாருக்கு பலன் கிடைக்கும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News