7th Pay Commission latest update: 18 மாத டிஏ அரியர் தொகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த வாரம் நல்ல செய்தி வரக்கூடும்.  மத்திய அமைச்சரவை இது தொடர்பாக சில முக்கிய முடிவுகளை அடுத்த வாரம் எடுக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அக்டோபர் 2021 முதல் 17% இல் இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டது. இருப்பினும் அரியர் தொகை இன்னும் டெபாசிட் செய்யப்படவில்லை. நிலுவையில் உள்ள மொத்த அரியர் தொகையையும் தற்போது ஊழியர்கள் ஒரே முறையில் பெறுவார்கள் என்று ஊடகங்களில் ஊகிக்கப்படுகிறது. ஊழியர்களில் ஒரு பிரிவினருக்கு இந்த மொத்த தொகை, ரூ. 2 லட்சத்தை எட்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த விவகாரம் குறித்து அடுத்த வாரத்தில் கலந்துரையாட மத்திய அமைச்சரவை ஆலோசித்து வருவதாகவும், அதில் அகவிலைப்படி அளவு முடிவு செய்யப்படும் என்றும் பல ஊடகச் செய்திகள் இப்போது கூறுகின்றன. எனினும், இந்த விவகாரத்தில் அதிகாரப்பூர்வமான அறிக்கைகள் எதுவும் வரவில்லை. இவை அனைத்தும் ஊகங்களே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


ALSO READ | ஊழியர்களுக்கு பரிசு, DA 3% உயர்த்துவதாக அரசு அறிவிப்பு


முன்னதாக, JCM இன் தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ராவை மேற்கோள் காட்டி ஜீ ஹிந்தி அறிக்கை, லெவல்-1 ஊழியர்களின் அகவிலைப்படி அரியர் (DA Arrear) தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும் என்று முன்பு குறிப்பிட்டிருந்தது. அதேசமயம், லெவல்-13 (7வது CPC அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ. 2,15,900) அல்லது நிலை-14 (ஊதிய அளவு) ஊழியர்களின் அகவிலைப்படி அரியர்  தொகை, ரூ.1,44,200-2,18,200 ஆக இருக்கும் என்று அறிக்கைகள் மேற்கோள் காட்டுகின்றன.


ஜேசிஎம் தேசிய கவுன்சில், பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை (DoPT) மற்றும் நிதியமைச்சர் இடையே அரியர் தொகை தொடர்பான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டதாக அறிக்கை மேலும் கூறுகிறது. ஆனால், உறுதியான பதில் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை. ஊழியர்கள் கோரிக்கையில் இன்னும் உறுதியாக இருப்பதாகவும், அரசுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 


எப்படியும், விரைவில் இது குறித்து அமைச்சரவை செயலாளருடன் கலந்துரையாடல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செலவினத் துறையின் ஆண்டு அறிக்கையின்படி, நாட்டில் மொத்தம் 48 லட்சம் மத்திய ஊழியர்களும், சுமார் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும் (Pensioners) உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | மத்திய அரசு ஊழியர்கள் இந்த தொகைக்கு வரி செலுத்த வேண்டாம்: இது உங்களுக்கு தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR