7th Pay Commission: கடந்த பட்ஜெட்டில் (பட்ஜெட் 2021) மத்திய அரசு, ஊழியர்களுக்கு பெரும் நிவாரணத்தை வழங்கியது. 2021 பட்ஜெட்டில் ஊழியர்களுக்கான பயணக் கொடுப்பனவு விடுப்புத் திட்டத்தில் ரொக்க வவுச்சர் திட்டத்தை (LTC Cash Voucher Scheme) அரசாங்கம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, இந்தத் தொகைக்கு மத்திய ஊழியர்கள் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. 2022 பட்ஜெட்டிலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பண வவுச்சர் திட்டம் என்றால் என்ன
இந்தத் திட்டம் 12 அக்டோபர் 2020 அன்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக, இந்த திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இருந்தது. ஆனால் பின்னர் தனியார் மற்றும் பிற மாநில ஊழியர்களும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவிட் 19 (Covid-19) தொற்றுநோய் காரணமாக எல்.டி.சி.க்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார். இத்திட்டம் அரசு ஊழியர்களிடம் அதிக பண இருப்புக்கு வழி வகுக்கும். பண இருப்பு அதிகமானால், மக்களின் செலவழிக்கும் திறனும் அதிகமாகும். இந்த முழு அமைப்பினால் பொருளாதாரம் பயனடையும். கொரோனா காரணமாக எல்டிசியைப் பயன்படுத்த முடியாத ஊழியர்களுக்கு, பயணக் கொடுப்பனவு விடுப்புத் திட்டத்தில் பண வவுச்சர் திட்டத்தின் பலன் வழங்கப்படும்.
ALSO READ | 7th Pay Commission: Base Year மாற்றத்தால் ஊழியர்களுக்கு அதிக நன்மைகள்
LTC என்றால் என்ன
மத்திய ஊழியர்களுக்கு (Central Government Employees) 4 ஆண்டுகளில் எல்.டி.சி வழங்கப்படுகின்றது. இந்த கொடுப்பனவில், அவர்கள் இந்த காலகட்டத்தில் ஒரு முறை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். மேலும், இந்த நேரத்தில், ஊழியர் தனது சொந்த ஊருக்கு இரண்டு முறை செல்லவும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த பயணக் கொடுப்பனவில், பணியாளர்கள் விமானப் பயணம் மற்றும் ரயில் பயணச் செலவுகளைப் பெறுகிறார்கள். இதனுடன், ஊழியர்களுக்கு 10 நாட்கள் PL-ம் (பிரிவிலேஜ்டு லீவ்) கிடைக்கும்.
ரொக்க வவுச்சர் திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள்
- LTC க்குப் பதிலாக ஊழியர்களுக்கு ரொக்கப் பணம் வழங்கப்படும்.
- பணியாளரின் கிரேடிற்கு ஏற்ப பயணக் கட்டணம் செலுத்தப்படும்.
- கட்டணம் முழுவதற்கும் வரி விலக்கு அளிக்கப்படும்.
- இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் பணியாளர் மூன்று மடங்கு கட்டணத்தைச் செலவிட வேண்டும்.
- விடுப்பு பணமாக்கலுக்கு (Leave Encashment), தொகையின் அளவையே செலவிட வேண்டும்.
- 12 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமான ஜிஎஸ்டியை ஈர்க்கும் வகையில், ஊழியர்கள் பணம் செலவழிக்க வேண்டும்.
- சேவைகள் அல்லது பொருட்கள் ஜிஎஸ்டி பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர் அல்லது வர்த்தகரிடமிருந்து மட்டுமே வாங்கப்பட வேண்டும்.
- சேவைகள் அல்லது பொருட்களுக்கான கட்டணமும் டிஜிட்டல் முறையில் செய்யப்பட வேண்டும்.
பயணக் கொடுப்பனவு அல்லது விடுப்புப் படியைப் பெறும்போது ஜிஎஸ்டி ரசீது கொடுக்கப்பட வேண்டும்.
ALSO READ | 7th Pay Commission பம்பர் ஊதிய உயர்வு நிச்சயம்: டி.ஏ உடன் இந்த காரணிகளிலும் ஏற்றம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR