7வது ஊதியக்கமிஷன் சமீபத்திய செய்தி: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரவுள்ளது. சமீபத்தில் ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், மற்ற கொடுப்பனவுகளில் கணிசமான அதிகரிப்பு சாத்தியமாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகவிலைப்படி அதிகரிப்பால், பயணப்படி (டிராவல் அலவன்ஸ்), சிட்டி அலவன்ஸ், ஆகியவை தானாகவே அதிகரிக்கும். இது தவிர, வருங்கால வைப்பு நிதி மற்றும் கிராச்சுட்டி ஆகியவற்றிலும் பெரிய அதிகரிப்பு இருக்கும். இவ்வாறு நடந்தால் மொத்த ஊதியத்தில் நல்ல அதிகரிப்பு இருக்கும். 


1: பிஎஃப் தொகை அதிகரிக்கும்


டிரான்ஸ்சென்ட் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் வெல்த் மேனேஜ்மென்ட் டைரக்டர் கார்த்திக் ஜாவேரி கூறுகையில், மத்திய ஊழியர்களின் மாதாந்திர பிஎஃப் மற்றும் கிராஜுவிட்டி அடிப்படை சம்பளம்+ டிஏவில் இருந்து கணக்கிடப்படுகிறது, டிஏ அதிகரித்தால் பிஎஃப், கிராச்சுட்டியும் அதிகரிக்கும் என்றார்.


2- பணிக்கொடை அதிகரிக்கும்


ஜவேரியின் கூற்றுப்படி, டிஏ 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 17 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜூன் 2021க்கு முன், அகவிலைப்படி 17 சதவீதமாக இருந்தது. தற்போது 34 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த சூழலில் இபிஎஃப் மற்றும் கிராஜுவிட்டி தொகையும் அதிகரித்துள்ளது. ஊழியர்களின் இபிஎஃப் மற்றும் கிராஜுவிட்டி பங்களிப்பு அதிகரித்துள்ளது.


3- பயணப்படி அதிகரிப்பு


ஜவேரியின் கூற்றுப்படி, டிஏ-வில் ஏற்படும் அதிகரிப்பின் விளைவு பயணப்படியிலும் தெரியும். டிஏ 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது பயணப்படியும் அதிகரிக்கும். 


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு நற்செய்தி, நிதி அமைச்சகம் அளித்த தகவல் 


4- ஓய்வூதியம் பெறுபவருக்கு நன்மை


7வது ஊதியக் குழு-வின் கீழ் அகவிலை நிவாரணம் (டிஆர்) அதிகரிப்பின் பலனை மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் பெறுவார்கள். இவர்களது டிஆர் 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஓய்வூதியதாரர்களின் மாதாந்திர ஓய்வூதியம் அதிகரிக்கும்.


அகவிலைப்படி ஜூலையில் மீண்டும் மாற்றப்படும்


மாநில ஊழியர் கூட்டுக் கவுன்சிலின் பொதுச் செயலாளர் ஆர்.கே.நிகாம் கூறுகையில், அடுத்த மாற்றம் 2022 ஜூலையில் இருக்கும் என்றார். தற்போதைய புள்ளிவிவரங்கள் அடுத்த உயர்வுக்கு சாதகமாக இல்லை. ஆனால், தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தால், அடுத்த அகவிலைப்படியில் நல்ல அதிகரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.


ஒன்றரை வருட நிலுவைத் தொகை பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை


கொரோனா காரணமாக முடக்கப்பட்ட அகவிலைப்படியின் நிலுவைத் தொகை ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் ஊழியர்களின் உரிமை, இவற்றை நிறுத்த முடியாது என உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது. ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான அகவிலைப்படியின் அரியர் தொகை பாக்கியுள்ளது. 


மேலும் படிக்க | 7th Pay Commission பம்பர் செய்தி: HBA வட்டி விகிதங்களை குறைந்தது அரசு 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR