7வது ஊதியக்குழு புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய செய்தி. 18 மாதங்களாக அகவிலைப்படி அரியர் தொகைக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கக்கூடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்து, தற்போது பரிசீலிக்கப்படவில்லை என்று அரசு முன்பு கூறியிருந்தது. எனினும், தற்போது மத்திய பணியாளர்கள் ஹோலி பண்டிகைக்கு முன்னதாக நிலுவையில் உள்ள டிஏ அரியர் தொகையை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கீழ், ஊழியர்களுக்கு 2.18 லட்சம் ரூபாய் வரையிலான பலன் கிடைக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. 


18 மாதங்களாக நிலுவையில் உள்ள டிஏ பாக்கிகள் குறித்து முடிவு 


18 மாத டிஏ அரியர் தொகை பற்றிய விவரகாரம் தற்போதைக்கு அஜெண்டவில் சேர்க்கப்படவில்லை. எனினும், இது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான அரியர் தொகையை செலுத்தும் முடிவை அரசாங்கம் நிறுத்தியுள்ளது. அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மறுபுறம், ஹோலி பண்டிகையையொட்டி, அகவிலைப்படியை உயர்த்தி ஊழியர்களுக்கு அரசாங்கம் ஒரு நல்ல செய்தியை வழங்கக்கூடும். 


நிதியமைச்சர் தெரிவித்தது என்ன?


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில நாட்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டு, 'கொரோனா தொற்றுநோய் காரணமாக, இந்த ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட தொகையை பயன்படுத்தி அரசாங்கம் ஏழைகளுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தது. தொற்றுநோய்களின் போது அரசாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளமும் குறைக்கப்பட்டது. எனினும், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படவில்லை, அகவிலைப்படியும் குறைக்கப்படவில்லை. ஆண்டு முழுவதும் ஊதியமும் டிஏ-வும் வழங்கப்பட்டது.’ என்று தெரிவித்தார்.


2 லட்சத்துக்கும் மேல் அரியர் கிடைக்கும்


ஜெசிஎம்-இன் தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ராவின் கூற்றுப்படி, லெவல்-1 ஊழியர்களின் அகவிலைப்படி அரியர் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும். அதேசமயம், லெவல்-13 (7வது CPC அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ. 2,15,900) அல்லது நிலை-14 (ஊதிய அளவு) ஊழியர்களின் அகவிலைப்படி அரியர்  தொகை, ரூ.1,44,200-2,18,200 ஆக இருக்கும். 


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்கள் மார்ச் 31-க்குள் இதை செய்து முடிக்க வேண்டும் 


டிஏ அரியர் தொகை எவ்வளவு கிடைக்கும்?


- குறைந்தபட்ச கிரேட் பே ரூ. 1800 (லெவல்-1 அடிப்படை ஊதிய அளவு ரூ.18000 முதல் ரூ.56900 வரை) உள்ள மத்திய ஊழியர்கள் ரூ. 4320 [{18000 இல் 4 சதவீதம்} X 6]-க்காக காத்திருக்கின்றனர்.


- [{ரூ.56900-ன் 4 சதவீதம்}X6] என்ற கணக்கீட்டில் இருக்கும் ஊழியர்கள் ரூ. 13,656 என்ற தொகைக்கு காத்திருக்கிறார்கள். 


- 7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச கிரேட் பேவில் 2020 ஜூலை முதல் டிசம்பர் வரை ரூ. 3,240 [{18,000-ன் 3 சதவீதம்}x6] என்ற அளவில் அகவிலைப்படி நிலுவைத் தொகையைப் பெறுவார்கள்.


- [{ரூ. 56,9003-ன் 3 சதவீதம்}x6] என்ற கணக்கீட்டில் உள்ளவர்களுக்கு ரூ.10,242 கிடைக்கும்.


- ஜனவரி மற்றும் ஜூலை 2021 க்கு இடைப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையைக் கணக்கிட்டால், அது 4,320 [{ரூ. 18,000-ன் 4 சதவீதம்}x6] ஆக இருக்கும்.


- [{₹56,900-ன் 4 சதவீதம்}x6] என்ற கணக்கீட்டுக்கு தொகை ரூ.13,656 ஆக இருக்கும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் உயர்வு, அறிவிப்பு விரைவில் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR