7 ஆவது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைபப்டி 3% உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்களுக்கு இனி 34% வீதத்தில் அகவிலைப்படி கிடைக்கும். இத்துடன், இந்த மாத சம்பளத்துடன், மத்திய ஊழியர்களுக்கு 3 மாத (ஜனவரி முதம் மார்ச் வரை) நிலுவைத் தொகையும் கிடைக்கும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் நிலுவைத் தொகையின் கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம். 


ஏஐசிபிஐ-ஐடபிள்யூ டிசம்பரில் குறைந்தது


அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி அதிகரிப்பால், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு, அடுத்த அகவிலைப்படி ஜூலை 2022 இல் கணக்கிடப்படும். 


டிசம்பர் 2021க்கான ஏஐசிபிஐ-ஐடபிள்யூ (தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு) தரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையின்படி, டிசம்பரில் இந்த எண்ணிக்கை 0.3 புள்ளிகள் குறைந்து 125.4 புள்ளிகளாக இருந்தது. நவம்பரில், இந்த எண்ணிக்கை 125.7 புள்ளிகளாக இருந்தது. டிசம்பரில் 0.24% குறைந்துள்ளது. ஆனால், இது அகவிலைப்படி உயர்வை பாதிக்கவில்லை. 


ஜூலை 2021 முதல் டிஏ கணக்கீடு


ஜூலை 2021 - ஏஐசிபிஐ-353 - அகவிலைப்படி - 31.81%
ஆகஸ்ட் 2021 - ஏஐசிபிஐ-354 - அகவிலைப்படி -  32.33%
செப்டம்பர் 2021 - ஏஐசிபிஐ- 355- அகவிலைப்படி -  32.81%
நவம்பர் 2021 - ஏஐசிபிஐ - 362.016- அகவிலைப்படி -  33 %
டிசம்பர் 2021  - ஏஐசிபிஐ - 361.152 - அகவிலைப்படி - 34%


அகவிலைப்படி எண்களின் கணக்கீடு


ஜூலைக்கான கணக்கீடு- 122.8X 2.88 = 353.664
ஆகஸ்டுக்கான கணக்கீடு- 123X 2.88 = 354.24
செப்டம்பர் மாதத்திற்கான கணக்கீடு- 123.3X 2.88 = 355.104
நவம்பர் மாதத்திற்கான கணக்கீடு - 125.7X 2.88= 362.016
டிசம்பர் மாதத்திற்கான கணக்கீடு - 125.4 X 2.88 = 361.152


மேலும் படிக்க | 7th Pay Commission: DA அதிகரிப்பு, நிலுவை தொகை குறித்த அறிவிப்பு வெளியானது!


34% அகவிலைப்படியில் கணக்கீடு


அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்ட பிறகு, மொத்த அகவிலைபப்டி 34% ஆகியுள்ளது. இப்போது ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில், மொத்த ஆண்டு அகவிலைப்படி ரூ.73,440 ஆக இருக்கும். வித்தியாசத்தைப் பற்றி பேசும்போது, சம்பளத்தில் ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும்.


குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு


1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 18,000
2. புதிய அகவிலைப்படி (34%) - ரூ.6120/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (31%) - ரூ.5580/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 6120- 5580 = ரூ 540/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 540X12 = ரூ.6,480


அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு


1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (34%) - ரூ 19,346/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (31%) - ரூ 17,639/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 19,346-17,639 = ரூ. 1,707/மாதம் 
5. ஆண்டு ஊதிய உயர்வு - 1,707 X12 = ரூ 20,484


மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு ரூ.4,500 கிடைக்க, மார்ச் 31க்குள் இதை செய்யணும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR