7th Pay Commission: ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறை (Department of Pension and Pensioners’ Welfare) செப்டம்பர் 20 அன்று முக்கிய தகவல்களுடன் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளது. உயிருடன் இருக்கும் சிபிஎஃப் பயனாளிகளின் அகவிலை நிவாரணம் (DR) 312% லிருந்து 356% ஆக (DR Hike) உயர்த்தப்பட்டுள்ளது. 1960 நவம்பர் 18 முதல் 1985 டிசம்பர் 31 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த நன்மை கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, பண்டிகை காலத்திற்கு முன்பாக, ஓய்வூதியம் பெறுபவர்கள் பெரிய நிவாரணத்தைப் பெறுவார்கள். இதனுடன், ஜூலை 1, 2021 முதல் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட அகவிலை நிவாரணம் (DR Hike) வழங்கப்படும். 1 ஜனவரி 2020, 1 ஜூலை 2020, 1 ஜனவரி 2021 என CPF பயனாளிகளுக்கு மூன்று தவணைகள் கிடைக்க வேண்டியுள்ளது.


5 வது ஊதியக்குழுவின் கீழ் எடுக்கப்பட்ட முடிவு


இது குறித்து வழங்கப்பட்ட தகவலின் படி, CPF பயனாளிகளுக்கான எக்ஸ் கிரேஷியா தொகையை அதிகரிப்பதற்கான முடிவு 5 வது ஊதியக்குழுவின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விதி 1 ஜூலை 2021 முதல் நடைமுறைக்கு வந்தது. CPF பயனாளிகளின் குழு A, B, C மற்றும் D இன் கீழ், ரூ .3000, 1000, 750 மற்றும் 650 என்ற அடிப்படையில் எக்ஸ் கிரேஷியா தொகை வழங்கப்படுகிறது.


ALSO READ: 7th Pay Commission: செப்டம்பரில் பம்பர் உயர்வா? மீண்டும் அதிகரிக்கிறதா ஊதியம்?


இப்போது ஓய்வூதியதாரர்களின் டிஆர் அதாவது அகவிலை நிவாரணம் (Dearness Relief) 312 சதவீதத்திலிருந்து 356 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர, ஓய்வு பெற்ற ஊழியர்களின் மற்றொரு பிரிவிற்கான டிஆர் 304 சதவீதத்திலிருந்து 348 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, தீபாவளிக்கு முன்பே, ஓய்வூதியர்களுக்கு பண்டிகை கொண்டாட்டம்தான்!!


யாருக்கு நன்மை கிடைக்கும்?


எந்த பயனாளியின் விதவை மற்றும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ .645 இழப்பீடு வழங்கப்படுகிறதோ, இந்த விதி அவர்களுக்கானது.


ஜனவரி 1, 1986 க்கு முன் ஓய்வு பெற்றவர்களின் (Pensioners), மாதந்தோறும் ரூ .645 இழப்பீடு வழங்கப்படும் விதவை மற்றும் குழந்தைகளுக்கு இந்த விதி பொருந்தும். இது தவிர, சிபிஎஃப் சலுகைகளுடன் 18 நவம்பர் 1960 க்கு முன் ஓய்வு பெற்று, ரூ. 654, 659, 703 மற்றும் ரூ .965 எக்ஸ் கிரேஷியா வகைகளில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கும் 348 சதவீதம் கிடைக்கும்.


சமீபத்தில் டிஏ மற்றும் டிஆர் அதிகரித்துள்ளது


நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, மத்திய அரசு அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணத்தை அதிகரித்துள்ளது. இது 1 ஜூலை 2021 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த அதிகரிப்பு அடிப்படை ஓய்வூதியத்தில் செய்யப்பட்டுள்ளது.


முன்னர், ஊழியர்களின் அகவிலைப்படி 17 சதவிகிதமாக இருந்தது. இது 28 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனுடன், அகவிலை நிவாரணமும் 17 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


இதுதான் அகவிலைப்படி விகிதம்


1 ஜனவரி 2020 முதல் 30 ஜூன் 2020 வரை - அடிப்படை சம்பளத்தில் 21%


1 ஜனவரி 2020 முதல் 31 டிசம்பர் 2020 வரை - அடிப்படை சம்பளத்தில் 24%


1 ஜனவரி 2021 முதல் 30 மே 2021 வரை - அடிப்படை சம்பளத்தில் 28%


சிசிஎஸ் (CCS) ஓய்வூதிய விதிகள், 1972 இல் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற அனைத்து நிபந்தனைகளும், ஓய்வூதியத் துறையின் உத்தரவுகளும், விடுமுறைகளுக்கு பதிலாக கிராஜுவிட்டி மற்றும் ரொக்க தொகை பெறும்போது பொருந்தும்.


ALSO READ: 7th Pay Commission: இந்த ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட், கிடைத்து DA Hike, அரியர் தொகை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR