7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி! முக்கிய தகவல் வெளியீடு

7th Pay Commission: ஊழியர்களர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அதிகரித்த அகவிலைப்படியின் நன்மையைப் பெறுவார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 12, 2021, 12:55 PM IST
7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி! முக்கிய தகவல் வெளியீடு title=

புதுடெல்லி: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் டிஏவை அதிகரித்த பிறகு, இப்போது மாநில அரசு ஊழியர்களும் அதன் பலனைப் பெறத் தொடங்கியுள்ளனர். இந்த வரிசையில், தற்போது குஜராத் மாநில அரசு தனது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 11% அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.

குஜராத்தின் அரசு ஊழியர்களுக்கு டிஏ அதிகரிக்கப்பட்டது
குஜராத் அரசாங்க ஊழியர்களின் அதிகரித்த அகவிலைப்படி (Dearness Allowance) ஜூலை 1, 2021 முதல் பொருந்தும். இந்த அதிகரிப்புக்குப் பிறகு, குஜராத்தின் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி 17% லிருந்து 28% ஆக (7th Pay Commission) அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது மத்திய அரசு மற்றும் குஜராத்தின் மாநில ஊழியர்களின் அகவிலைப்படி ஒரே மாதிரியாகிவிட்டது.

ALSO READ:: 7th Pay Commission: ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய தகவலை அளித்தது அரசு

இந்த அகவிலைப்படி உயர்வு மாநில அரசு அதிகாரிகள், ஊழியர்கள், பஞ்சாயத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும். குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த முக்கிய அறிவிப்பை அறிவித்தார். அகவிலைப்படி உயர்வு 9.61 லட்சம் மாநில அரசு மற்றும் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு பயனளிக்கும். மேலும் இவர்களுடன் 4.5 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இந்த உயர்வை பெறுவார்கள்.

அது மட்டுமல்லாமல், குஜராத் அரசு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் குஜராத் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் (GMERS) மருத்துவக் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கான பயிற்சி அல்லாத உதவித்தொகையையும் (NPA) அங்கீகரித்துள்ளது.

இரண்டு மாத நிலுவைத் தொகையும் கிடைக்கும்
DA இல் 11% அதிகரிப்புடன், ஒவ்வொரு மாதமும் கஜானாவுக்கான செலவு ரூ .378 கோடியாக அதிகரிக்கும். செப்டம்பர் மாத சம்பளத்துடன் டிஏவும் வரும். அதேபோல் ஜூலை மாத நிலுவைத் தொகை அக்டோபரின் சம்பளத்துடன் வரும், ஆகஸ்ட் மாத நிலுவைத் தொகை அடுத்த ஆண்டு ஜனவரியில் கிடைக்கும். அதேசமயம் செப்டம்பரில் அதிகரித்த டிஏ இந்த மாத சம்பளத்துடன் கிடைக்கும் என்று படேல் தெரிவித்தார்.

ALSO READ: 7th Pay Commission சூப்பர் செய்தி: HBA திட்டத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News