7th Pay Commission Latest Updates: நீண்ட காத்திருப்புக்கு பிறகு, மத்திய அரசு ஊழியர்கள் இப்போது அடிப்படை சம்பளத்தில் 28% அகவிலைபப்டியை (Dearness Allowance) பெறுகின்றனர். இதனுடன், ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவும் (HRA) அதிகரித்துள்ளது. இதனை அடுத்து, இந்த மாதம் அதாவது ஊழியர்களின் செப்டம்பர் மாதத்துக்கான சம்பளம் இப்போது இரட்டை போனஸுடன் வரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

DA உடன் HRA-வும் அதிகரித்தது


அகவிலைப்படி அதிகரிப்புடன், மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவையும் (HRA) அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. விதிகளின்படி, அகவிலைப்படி 25%ஐத் தாண்டியுள்ளதால், HRA அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வீட்டு வாடகை கொடுப்பனவை 27%ஆக உயர்த்தியுள்ளது.


செலவினத் துறை 7 ஜூலை 2017 அன்று ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், அகவிலைப்படி 25%ஐ தாண்டும்போது HRA திருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஜூலை 1 முதல், அகவிலைப்படி 28% ஆக அதிகரித்துள்ளது. எனவே HRA ஐ திருத்துவதும் அவசியம் ஆகிறது.


ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் பணிக்கொடை ரூ.7 லட்சமாக உயர்கிறதா?


நகரங்களுக்கு ஏற்ப HRA அதிகரிக்கும்


அரசாங்கத்தின் உத்தரவின் படி, HRA நகரங்களின்படி X, Y மற்றும் Z என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. திருத்தத்திற்குப் பிறகு, X வகை நகரங்களுக்கான HRA அடிப்படை ஊதியத்தில் 27% ஆக இருக்கும். அதேபோல் Y வகை நகரங்களுக்கான HRA அடிப்படை ஊதியத்தில் 18% ஆக இருக்கும். Z வகை நகரங்களுக்கு இது அடிப்படை ஊதியத்தில் 9% ஆக இருக்கும்.


இப்போது HRA எவ்வளவு உயரும்?


ஒரு நகரத்தின் மக்கள் தொகை 5 லட்சத்தை தாண்டினால் அது Z பிரிவில் இருந்து Y பிரிவிற்கு மேம்படுத்தப்படும். அதாவது, அங்கு 9% க்கு பதிலாக, 18% HRA கிடைக்கும். 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள், X பிரிவில் வரும். மூன்று பிரிவுகளுக்கும் குறைந்தபட்ச வீட்டு வாடகை கொடுப்பனவு 5400, 3600 மற்றும் 1800 ரூபாயாக இருக்கும். செலவினத் துறையின் படி, அகவிலைப்படி 50% ஐ எட்டும்போது, ​​எச்ஆர்ஏ, X, Y மற்றும் Z நகரங்களுக்கு 30%, 20% மற்றும் 10% ஆகக் குறைக்கப்படும்.


ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்?


7 வது சம்பள கமிஷன் (7th Pay Commission) பே மேட்ரிக்ஸ் படி, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ .18,000 ஆகும். இந்த அடிப்படை சம்பளமான 18,000 இல், மத்திய ஊழியர்கள் 17% வீதம் ஜூன் 2021 வரை ரூ. 3060 டிஏ பெறுகின்றனர்.


ஜூலை 2021 முதல், இப்போது ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படிப்படி என்ற விகிதத்தில் ஒவ்வொரு மாதமும் 5040 ரூபாய் கிடைக்கிறது. அதாவது, மாதச் சம்பளத்துடன் ரூ. 1980 (5040-3060 = 1980) சேர்த்து அதிகமாகக் கிடைக்கும்.


இதே வழியில், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் முடிவு செய்யப்படும். ஓய்வூதியதாரர்கள், தங்கள் அடிப்படை ஓய்வூதியத்தின் அடிப்படையில், தங்கள் அகவிலைப்படி அதிகரித்தவுடன் மொத்த ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை கணக்கிட முடியும்.


இவ்வளவு அதிகரிப்பு இருக்கும்


குறைந்தபட்ச DA உயர்வு ரூ. 5040 ஆகவும், குறைந்தபட்ச HRA அதிகரிப்பு ஒவ்வொரு மாதமும் ரூ .1800 ஆகவும் இருக்கும். அதாவது, செப்டம்பரில் வரும் சம்பளம் ரூ .6840 (5040 + 1800) அதிகரிக்கும்.


ALSO READ: 7th Pay Commission: ஓய்வூதியதாரர்களுக்கு பம்பர் செய்தி, டி.ஆர்-ல் 356% அதிகரிப்பு 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR