7th Pay Commission: ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு, அவர்களின் அதிகரித்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக குழந்தைகள் கல்வி உதவித்தொகையை (Children Education Allowance - CEA) கோர முடியாத ஊழியர்கள், இப்போது அதை கோரலாம். இதற்காக அவர்களுக்கு அதிகாரப்பூர்வ ஆவணங்களும் தேவைப்படாது.
கொரோனா காரணமாக பல ஊழியர்களால் CEA-ஐ கோர முடியவில்லை
மத்திய அரசு ஊழியர்களுக்கு, அவர்களது குழந்தைகளின் கல்விக்கான உதவித்தொகை கிடைக்கிறது. இதன் தொகை 7 வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின்படி மாதம் ரூ .2,250 ஆகும். ஆனால் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களால் CEA ஐ கோர முடியவில்லை.
அரசு ஊழியர்கள் செல்ஃப் டிக்லரேஷன் அளிக்க வேண்டும்
ஜூலை மாதத்தில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) ஆஃபிஸ் ஆஃப் மெமோராண்டத்தை (OM) வெளியிட்டது. கொரோனா காரணமாக, மத்திய பணியாளர்கள், குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டதாக அதில் கூறப்பட்டது. ஏனெனில், கட்டணங்களை ஆன்லைனில் டெபாசிட் செய்த பிறகும், பள்ளியில் இருந்து எஸ்எம்எஸ்/இ-மெயில் மூலம் தேர்வு தேர்வு முடிவு / ரிபோர்ட் கார்டுகள் ஆகியவை அனுப்பப்படவில்லை.
ALSO READ: 7th Pay Commission: அகவிலைப்படியுடன் இதுவும் அதிகரிப்பதால் ஊதியத்தில் சூப்பர் ஏற்றம்!!
CEA கிளெய்மை, Self declaration அல்லது, தேர்வு முடிவு / ரிப்போர்ட் கார்ட் / கட்டண செலுத்துதல் ஆகியவற்றின் எஸ்எம்எஸ்/மின்-அஞ்சல் ஆகியவற்றின் பிரிண்ட் அவுட் மூலமும் கிளெயிம் செய்து கொள்ளலாம் என DoPT கூறியுள்ளது. இருப்பினும், இந்த வசதி மார்ச் 2020 மற்றும் மார்ச் 2021 இல் முடிவடையும் கல்வி ஆண்டுக்கு மட்டுமே கிடைக்கும்.
ஊழியர்களுக்கு எவ்வளவு கொடுப்பனவு கிடைக்கும்?
மத்திய அரசு (Central Government) ஊழியர்களுக்கு, இரண்டு குழந்தைகளின் கல்விக்காக குழந்தைகள் கல்வி உதவித்தொகை கிடைக்கிறது. ஒரு குழந்தைக்கு இந்த உதவித்தொகை மாதம் ரூ. 2250 ஆகும். அதாவது, இரண்டு குழந்தைகள் உள்ள ஊழியர்களுக்கு மாதம் ரூ. 4500 கிடைக்கும். இருப்பினும், இரண்டாவது குழந்தை இரட்டை குழந்தைகளாக இருந்தால், இந்த உதவித்தொகை முதல் குழந்தையுடன் இரண்டாவதாக பிறந்த இரட்டைக் குழந்தைகளின் கல்விக்காகவும் வழங்கப்படுகிறது.
CEA கிளெயிம் செய்ய பல ஆவணங்கள் தேவைப்படுகின்றன
குழந்தைகள் கல்வி உதவித்தொகையை பெற, மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) பள்ளி சான்றிதழ் மற்றும் கிளெயிம் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். பள்ளியிலிருந்து பெறப்பட்ட டிக்லரேஷனில், குழந்தை அவர்களது நிறுவனத்தில்தான் படிக்கிறார் என்று எழுதப்பட்டிருக்கும். இதனுடன், குழந்தைகள் படித்த கல்வியாண்டும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
CEA கிளெயிம் செய்ய, குழந்தைகளின் ரிப்பேர்ட் கார்ட், சுய சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் கட்டண ரசீது ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.
ALSO READ:7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 'பண்டிகை பரிசு'; அதிரடியாக உயரும் சம்பளம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR