7th Pay Commission: ஜூலை 1, 2021 முதல், மத்திய அரசு ஊழியர்களின் 28% அகவிலைப்படி அதிகரிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிகரித்த சம்பளமும் அரசு ஊழியர்களின் கணக்கில் வந்து விட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு ஊழியர்களின் ஊதியம் அதிகரித்த பிறகு, இப்போது இவர்களது மற்ற கொடுப்பனவுகளும் அதிகரித்துள்ளன. அதில் முக்கியமான ஒரு கூறு வீட்டு வாடகை கொடுப்பனவாகும். இந்த கொடுப்பனவுக்கான தொகையும் அதிகரித்துள்ளது.


ஊழியர்கள் அதிகரித்த HRA-ஐ பெறத் தொடங்கினர்


அகவிலைப்படி (Dearness Allowance) 25%-ஐ விட அதிகமாக இருந்தால் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) தானாகவே திருத்தப்படும். DoPT-யின் அறிவிப்பின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படியின் அடிப்படையில், வீட்டு வாடகை கொடுப்பனவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


அரசாங்கம் இப்போது அதிகரித்த HRA- இல் மற்ற மத்திய ஊழியர்களையும் சேர்க்கத் தொடங்கியுள்ளது. அனைத்து ஊழியர்களும் அதிகரித்த HRA இன் நன்மைகளைப் பெறத் தொடங்கியுள்ளனர். நகரத்தின் வகையின்படி, 27 சதவிகிதம், 18 சதவிகிதம் மற்றும் 9 சதவிகிதம் என ஊழியர்கள் எச்ஆர்ஏ-ஐப் பெறத் தொடங்கியுள்ளன. இந்த அதிகரிப்பு 1 ஜூலை 2021 முதல் அகவிலைப்படி அதிகரிப்புடன் நடைமுறைக்கு வந்துள்ளது.


ALSO READ: 7th Pay Commission: இந்த ஊழியர்கள் காட்டில் பண மழை, டி.ஏ அதிகரிப்புடன் போனசும் கிடைக்கும் 


நகர வாரியாக HRA மாறுபடும்


வீட்டு வாடகை கொடுப்பனவின் வகைகள் X, Y மற்றும் Z வகை நகரங்களாக பிரிக்கப்படுகின்றன. அதாவது X பிரிவில் வரும் ஊழியர்கள் இப்போது மாதத்திற்கு ரூ .5400 க்கு மேல் HRA பெறுவார்கள். Y பிரிவில் வரும் நகரங்களில் உள்ள ஊழியர்களுக்கு மாதம் ரூ. 3600 மற்றும் Z வகுப்பு நகரங்களில் வசிக்கும் ஊழியர்களுக்கு மாதம் ரூ .1800 கிடைக்கும்.


50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் X பிரிவில் வருகின்றன. இந்த நகரங்களில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு 27% HRA கிடைக்கும். Y வகை நகரங்களில் இது 18 சதவீதமாகவும், Z  பிரிவில் 9 சதவீதமாகவும் இருக்கும்.


HRA எவ்வாறு கணக்கிடப்படுகிறது


7 வது ஊதிய மேட்ரிக்ஸின் படி, மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அதிகபட்ச அடிப்படை சம்பளம் மாதத்திற்கு ரூ .56000 ஆகும். இதில் HRA 27% ஆக கணக்கிடப்பட வேண்டும்.


இதன் கணக்கீடு இந்த வகையில் இருக்கும்:


HRA = ரூ. 56,000 x 27/100 = மாதம் ரூ. 15,120


முன்னர் இருந்த HRA = ரூ. 56,000 x 24/100 = மாதம் ரூ. 13,440


தற்போது கிடைத்துள்ள நன்மை = 15120-13440 = மாதம் ரூ. 1680


முன்பு எவ்வளவு HRA கிடைத்தது


7 வது ஊதியக்குழு அமலுக்கு வந்தபோது, ​​எச்ஆர்ஏ 30 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 10 சதவீதத்தில் இருந்து 24, 18 மற்றும் 9 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. மேலும் வீட்டு வாடகை கொடுப்பனவு, X, Y மற்றும் Z ஆகிய 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.


அப்போது, DoPT-யின் அறிவிப்பில், அகவிலைப்படி 25% என்ற அளவை தாண்டும்போது, ​​HRA தானாக திருத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டது.


ALSO READ:7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 'பண்டிகை பரிசு'; அதிரடியாக உயரும் சம்பளம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR