7th Pay Commission: ஊழியர்களுக்கு குட் நியூஸ், அகவிலைப்படி ஏற்றம்... சம்பளம் உயரும்!!
7th Pay Commission: மோடி அரசு வெள்ளிக்கிழமை, அதாவது இன்று அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இதில் அகவிலைப்படி அதிகரிப்புக்காக அங்கீகாரம் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
மத்திய ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, டிஏ உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. அதற்கு மத்திய அரசு கிரீன் சிக்னல் கொடுக்கப் போகிறது. 4% அகவிலைப்படி உயர்வுக்கு மோடி அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்படும். அதன் பிறகு மார்ச் மாத சம்பளம் வழங்கப்படும். வெள்ளிக்கிழமை மாலை அமைச்சரவைக் கூட்டம் உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சிபிஐ-ஐடபிள்யூ தரவுகளின்படி, டிசம்பர் 2022 வரை அகவிலைப்படி 4.23% அதிகரித்துள்ளது. ஆனால், இது மத்திய ஊழியர்களுக்கு ஒரு சுற்று எண்ணிக்கையிலேயே வழங்கப்படுகிறது. ஆகையால் இது 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
அகவிலைப்படியில் 4% அதிகரிப்பு அங்கீகரிக்கப்பட்டது
மோடி அரசு வெள்ளிக்கிழமை (மார்ச் 17) அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இதில் அகவிலைப்படி அதிகரிப்புக்காக அங்கீகாரம் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. அகவிலைப்படி உயர்வு ஜனவரி 2023 முதல் பொருந்தும் என்று கருதப்படும். ஏனெனில், கடந்த ஆறு மாதங்களில் அதாவது ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், நுகர்வோர் விலைக் குறியீட்டுக்கு இடையேயான பணவீக்கம் 4.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதனால் அகவிலைப்படி 4% அதிகரித்துள்ளது. இப்போது அகவிலைப்படி 42% வீதம் வழங்கப்படும். ஜனவரி வரை ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி கிடைத்தது. அடுத்த டிஏ உயர்வு ஜூலை மாதத்தில் இருக்கும்.
7வது ஊதியக்குழுவின் கீழ் அகவிலைப்படி உயர்வு
7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி மத்திய ஊழியர்களுக்கு கொடுப்பனவுகள் கிடைக்கின்றன. அகவிலைப்படி அதாவது டிஏ இந்த பரிந்துரைகளின்படி அதிகரிக்கப்படுகிறது. தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு பகுதியான தொழிலாளர் பணியகம், நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் பணவீக்கம் எந்த விகிதத்தில் அதிகரித்துள்ளதோ அந்த விகிதத்தில் அகவிலைப்படியை வழங்குகிறது. ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் இது திருத்தப்படுகிறது. இப்போது அறிவிக்கப்படும் 4% அதிகரிப்பு ஜனவரி 2023 முதல் பொருந்தும். முன்னதாக ஜூலை மாதத்திலும் 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.
ஜனவரி, பிப்ரவரி மாத பாக்கிகள் கிடைக்கும்
உயர்த்தப்பட்ட அகவிலைப்படி மார்ச் மாத சம்பளத்தில் வழங்கப்படும். அப்போது ஊழியர்களின் ஊதியம் உயரும். ஆனால், 2023 ஜனவரியில் இருந்து இது அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி முதல் மத்திய ஊழியர்களின் சம்பளத்தில் திருத்தப்பட்ட டிஏ-வுக்கான தொகை கிடைக்கும். இந்நிலையில், ஊழியர்களுக்கு 2 மாத கால டிஏ நிலுவைத் தொகையையும் அரசு வழங்கவுள்ளது. வெவ்வேறு ஊதியக் குழுக்களுக்கு டிஏ நிலுவைத் தொகை வேறுபட்டிருக்கலாம். ஆனால், லெவல்-3ன் பே பேண்ட்-1 இன் அடிப்படைச் சம்பளம் ரூ.18000 எனக் கணக்கிட்டால், ஒரு மாதத்தில் மொத்தம் ரூ.720 கூடுதலாகக் கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத நிலுவைத் தொகை சேர்ந்து ரூ.1440 கிடைக்கும்.
அகவிலைப்படி 45% ஐ அடையலாம்
ஜனவரி 2023க்கான CPI-IW குறியீட்டிற்கான எண்கள் பிப்ரவரி 28 அன்று வெளியிடப்பட்டன. 0.5 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 132.8ஐ எட்டியுள்ளது. அடுத்த அகவிலைப்படி அதிகரிப்பு 2023 ஜூலையில் இருக்கும். மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை மாதத்தில் DA/DR மதிப்பெண் 1% அதிகரித்துள்ளது. அதாவது ஜனவரி 2023க்கான அகவிலைப்படி 42.37% ஆகும். இதன் அடிப்படையில், அவர்களது அகவிலைப்படி 42% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது ஜூலைக்கு வரும் எண்ணிக்கை 1% அதிகரித்துள்ளது. அதாவது தற்போது 43.08 சதவீதத்தை இது எட்டியுள்ளது. இருப்பினும், 5 மாத CPI-IW குறியீட்டின் எண்கள் இன்னும் வரவில்லை. இதற்குப் பிறகுதான் அடுத்த திருத்தத்தில் டிஏ / டிஆர் எவ்வளவு அதிகரிக்கும் என்பது முடிவு செய்யப்படும் என்பதை மத்திய அரசு ஊழியர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ