7th Pay Commission: நீண்ட காத்திருப்புக்கு பிறகு, ஜூலை 1 முதல், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான உதவித்தொகை (DR) 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. மத்திய அரசு, ஊழியர்களின் அகவிலைப்படியை 17% லிருந்து 28% ஆக உயர்த்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில், ஊழியர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி, தீபாவளிக்கு முன் 3% அகவிலைப்படி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், மொத்த அகவிலைப்படி 31%ஆக இருக்கும். .


அகவிலைப்படி மீண்டும் அதிகரிக்கும்


பணியாளர்கள் பணவீக்கத்திலிருந்து சிறிது நிவாரணம் பெற, 3% அகவிலைப்படி உயர்வை அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என்று ஊழியர் சங்கம் கோருகிறது. AICPI குறியீட்டின் தரவின் படி குறியீடு  வெளி வந்துள்ளது. இந்த குறியீடு 121.7 ஐ எட்டியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஜூன் 2021 க்கான அகவிலைப்படி 3% அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ALSO READ: 7th Pay Commission: இந்த ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட், கிடைத்து DA Hike, அரியர் தொகை


அகவிலைப்படி 31% ஆக இருக்கும்


அதன்படி, அகவிலைப்படி 31.18 சதவிகிதமாக இருக்கும், ஜூன் 2021 க்கான Dearness Allowance (DA) செப்டம்பர் நடுப்பகுதியில் அறிவிக்கப்படலாம் என்று முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது


31% அகவிலைப்படியில் கணக்கீடு


ஜூன் மாத அகவிலைப்படி 3 சதவிகிதம் அதிகரித்தால், மொத்த டிஏ 31 சதவீதமாக மாறும். 7 வது ஊதியக்குழு மேட்ரிக்ஸ் படி, மத்திய ஊழியர்களின் நிலை -1 ன் சம்பள வரம்பு ரூ.18,000 முதல் ரூ.56900 வரை இருக்கும். இப்போது அடிப்படை சம்பளமான ரூ .18,000 இல் 28% என்ற விகிதத்தில், மாதாந்திர உதவித்தொகையான ரூ .5040, 31%  சதவிகித்த்தில் ரூ .5580 ஆக அதிகரிக்கும். அதன்படி, ஆண்டு ஊதிய உயர்வு ரூ. 6480 ஆக இருக்கும்.


சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?


1. ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ .18,000
2. புதிய டியர்னஸ் அலவன்ஸ் (31%) ரூ .5580/மாதம்
3. இதுவரையிலான உதவித்தொகை (28%) ரூ. 5040/மாதம்
4. கூடுதல் சம்பளம் - ரூ. 5580- ரூ.5040 = ரூ. 540/மாதம் 
5. ஆண்டு சம்பளம் அதிகரிக்கும் அளவு 540X12 = ரூ 6480 


அதிகபட்ச அடிப்படை சம்பளத்தில் கணக்கீடு
இப்போது இந்த கணக்கீடு நிலை -1  ஊழியர்களுக்கு அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ .56900  என்ற அளவில் பெறும் ஊதிய உயர்வை காணலாம்


31% DA  என்ற அளவில் கணக்கீடு


1. ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.56900
2. புதிய டியர்னஸ் அலவன்ஸ் (31%) - ரூ.17639/மாதம்
3. இதுவரையிலான (28%)  டியர்னஸ் அலவன்ஸ்- ரூ. 15932
4. கூடுதலகா பெறும் சம்பளம்- 17639-15932 = ரூ 1707/மாதம் 
5. ஆண்டு சம்பள உயர்வு 1707X12 = ரூ 20484 அதிகரிப்பு


அதாவது, ஆண்டு ஊதிய உயர்வு ரூ.20484 ஆக இருக்கும். எனினும், இதில் HRA சேர்க்கப்படவில்லை. HRA ஐ சேர்த்த பின்னரே இறுதிச் சம்பளம் வழங்கப்படும்.


ALSO READ: 7th Pay Commission: DA, DR குறித்து அரசின் தலையீட்டை நாடிய ஓய்வூதியர் சங்கம், விவரம் இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR