கொரோனா தொற்றுநோய் காரணமாக, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (DA) அரசாங்கம் முடக்கியுள்ளது. அரசாங்கம் ஊழியர்களுக்கு பழைய விகிதத்தில் அகவிலைப்படியை வழங்கி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் ஊழியர்களுக்கு அதிக அளவில் இழப்பு ஏற்படுகிறது. ஆனால் இப்போது அரசாங்கம் மீண்டும் அகவிலைப்படியை அதிகரிப்பது குறித்து சிந்திக்கத் தொடங்கியுள்ளது. அறிக்கையின்படி, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை அதிகரிக்க அரசாங்கம் டிசம்பரில் சில அறிவிப்புகளை வெளியிடக்கூடும். இதை அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.


அரசாங்கம் ஆண்டுக்கு இரண்டு முறை ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரிக்கிறது. இந்த ஆண்டு ஜனவரியில், DA நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டது. ஆனால் கொரோனா நெருக்கடி மற்றும் பின்னர் விதிக்கப்பட்ட லாக்டௌன் காரணமாக, டி.ஏ.வை முடக்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்தது. கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, அரசாங்கம் அதிகமான செலவுச் சுமையைச் சுமக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாக ஜூலை மாதத்திலும் அகவிலைப்படியை அரசாங்கம் அதிகரிக்கவில்லை.


ஓய்வூதியம் பெறுவோர் (Pensioners) மற்றும் பணியாளர்கள் உயரும் பணவீக்கத்துடன் தங்கள் வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் அகவிலைப்படியை உயர்த்துகிறது. ஜனவரியில், அரசாங்கம் DA-வை நான்கு சதவீதமாக உயர்த்தியது. அதன் பின்னர் அது 17 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாக உயர்ந்துள்ளது.


ALSO READ: LTC Cash Voucher Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசின் தீபாவளி பரிசு..!!!


கொரோனா வைரஸால் (Corona Virus) ஏற்பட்ட லாக்டௌன் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்தன. இதன் காரணமாக அரசாங்கத்தின் வருவாய் கணிசமாகக் குறைந்தது. அதே நேரத்தில் சமூகப் பாதுகாப்புக்காக நடத்தப்படும் திட்டங்கள் காரணமாக அரசாங்கத்தின் செலவுகள் அதிகரித்தன. இதைக் கருத்தில் கொண்டு, ஜூலை 1, 2021 க்குள் DA அதாவது ஊழியர்களின் அகவிலைப்படியை ஃப்ரீஸ் செய்ய அரசாங்கம் முடிவு செய்தது.


அரசாங்கத்தின் இந்த முடிவின் காரணமாக, அரசு ஊழியர்களுக்கு மூன்று அகவிலைப்படிகளுக்கான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 1, 2020 முதல், டிஏ தவணை மீதமுள்ளது. அந்தக் காலத்திற்கு, 4 சதவீத டிஏ அதிகரிப்பையும் அரசாங்கம் அறிவித்து விட்டிருந்தது.


இதற்காக, மார்ச் மாதத்தில் அமைச்சரவை அதனுடன் தொடர்புடைய ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியது. ஆனால் அது செயல்படுத்தப்படுவதற்கு முன்னரே லாக்டௌன் விதிக்கப்பட்டது. அரசாங்கத்தின் அறிவிப்பின்படி, ஜூலை 2020 முதல் 2021 ஜனவரி 1 வரையிலான DA தவணையிலும் நெருக்கடி நிலவுகிறது. இந்த இரண்டு தவணைகளிலும் குறைந்தது மூன்று சதவிகிதம் அதிகரிப்பு இருந்தால் கூட, ஊழியர்களுக்கு மொத்தம் 10 சதவிகித நன்மை கிடைக்கும். 


ALSO READ: விலை உயர்வு எதிரொலி: மானிய விலையில் பருப்பு வகைகளை மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR