7th Pay Commission: புதுச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் பள்ளி ஆசிரியர்களுக்கு இதோ ஒரு நற்செய்தி. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி ஊதியம் வழங்கப்படும் என்று புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று (மார்ச் 15) அறிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய ஊதியக் குழு பரிந்துரைகளின்படி தங்களுக்கும் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிலுவையில் உள்ள நிலையில், புதுச்சேரி அரசிடம் இருந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.


புதுச்சேரி அரசு உத்தரவு


இதுகுறித்த விவரங்களை அளித்த அவர், ஏழாவது ஊதியக் குழுவின் அறிக்கையின்படி ஊதியம் வழங்குவதற்கு தேவையான உத்தரவை புதுச்சேரி யூனியன் பிரதேச நிர்வாகம் பிறப்பித்துள்ளது என்றார். அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர் குழு உள்துறை அமைச்சரை சந்தித்து தங்களுக்கு பயன் அளிக்கும் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தனர்.


மேலும் படிக்க | உங்கள் ஆதார் அட்டை 10 ஆண்டுகள் பழமையானதா.. இன்றே புதுபிக்கவும்... இல்லையெனில்...!


புதுச்சேரி, யூனியன் பிரதேசமாக இருப்பதால், மத்திய துறையில் நிலவும் முறைக்கு இணையாக, பிராந்திய நிர்வாகத்தில் உள்ள ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் அகவிலைப்படிகள் முறையைப் பின்பற்றுகிறது.


மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு


இதற்கிடையில், மத்திய அமைச்சரவை எந்த நேரத்திலும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது. சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும்பட்சத்தில், ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை, தற்போதுள்ள 38 சதவீதத்தில் இருந்து, 42 சதவீதமாக, நான்கு சதவீதம் உயர்த்தி, மத்திய அரசு உயர்த்தலாம்.


தொழிலாளர் அமைச்சகம் ஒவ்வொரு மாதமும் வெளியிடும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான (CPI-IW) சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA உயர்வு செய்யப்படுகிறது.


சமீபத்திய தரவுகளின்படி, சில்லறை பணவீக்கம் பிப்ரவரியில் 6.44% ஆகக் குறைந்துள்ளது, முக்கியமாக உணவு மற்றும் எரிபொருள் பொருட்களின் விலைகளில் சிறிது தளர்வு காரணமாக, ரிசர்வ் வங்கியின் ஆறுதல் அளவான 6% க்கு மேல் தொடர்ந்து இரண்டாவது மாதமாக இருந்தது.


மேலும் படிக்க | ஜாக்பாட்! மூத்த குடிமக்களுக்கு ரயில்வே அளித்த மாஸ் தகவல், விரைவில் இந்த வசதி
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ