7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு பெரிய அளவிலான அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு எவ்வளவு சம்பளம் உயர்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூலை 1 முதல், மத்திய ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படியும் (டிஏ) ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படியும் (DA) அறிவிக்கப்பட்டது. தற்போது, ​​ஊழியர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. தற்போது , மத்திய அரசு 28% அகவிலைப்படியை 31% ஆக உயர்த்தியுள்ளது.  31% டிஏ காரணமாக உங்கள் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதற்கான கணக்கீடு இது.  


மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மீண்டும் 3% உயர்த்தியுள்ளது, இப்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DA மற்றும் DR 31% வீதம் வழங்கப்படும். மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் தரத்திற்கு ஏற்ப சம்பள உயர்வு பெறலாம்.


தீபாவளிக்கு முன்னதாக அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. அதாவது, மத்திய ஊழியர்களுக்கு (Central Government Employees) இனி 31 சதவீத டிஏ உடன் சம்பளம் கிடைக்கும். ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இதன் மூலம் பலன் பெறுவார்கள்.


ALSO READ:7th Pay Commission: ஊழியர்களுக்கு நற்செய்தி! மீண்டும் சம்பள உயர்வு 


மத்திய அரசின் அறிவிப்பின்படி, இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலையில், அரசாங்கம் அகவிலைப்படியை 11 சதவீதம் என்பதில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தியது. அதன் பிறகு தற்போது 3 சதவீதம் அதிகரித்துள்ளது.  


இப்போது 3% அகவிலைப்படி அதிகரிப்புடன்,  7வது சம்பள கமிஷன் மேட்ரிக்ஸின் படி, மத்திய ஊழியர்களின் நிலை-1 இன் சம்பள வரம்பு ரூ.18,000 முதல் ரூ.56900 வரை இருக்கும். இப்போது ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில் (Basic Sallary), மொத்த ஆண்டு அகவிலைப்படி ரூ.66,960. ஆனால் வித்தியாசத்தைப் பற்றி பேசுகையில், சம்பளத்தில் ஆண்டு அதிகரிப்பு ரூ.30,240 என்று கூறப்படுகிறது.


குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ 18,000
2. புதிய அகவிலைப்படி (31%) ரூ.5580/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (17%) ரூ.3060/மாதம்
4. எவ்வளவு அகவிலைப்படி அதிகரித்தது 5580-3060 = ரூ.2520/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு 2520X12 = ரூ.30,240


READ ALSO | 7th Pay Commission: ஊழியர்களுக்கு ஏமாற்றம், அரசு தரப்பில் வந்த மிகப்பெரிய அப்டேட்!!


அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு


1. பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ 56900
2. புதிய அகவிலைப்படி (31%) ரூ 17639/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (17%) ரூ.9673/மாதம்
4. எவ்வளவு அகவிலைப்படி அதிகரித்தது 17639-9673 = ரூ 7966/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு 7966X12 = ரூ 95,592


31% அகவிலைப்படியின்படி, சம்பளத்தில் ஆண்டுக்கு தோராயமாக 95,592 ரூபாய் அதிகரிக்கும்.


ALSO READ:7th Pay Commission: ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு, ஊதிய உயர்வுக்கு தயாராகும் அரசு 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR