7th Pay Commission: BSNL ஊழியர்களுக்கு நல்ல செய்தி, நவம்பர் மாதம் ஊதியத்தில் ஏற்றம்

2007 ஆம் ஆண்டின் அடிப்படை ஊதிய திருத்தத்தின் அடிப்படையில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வின் பலன் கிடைக்கும்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 11, 2021, 10:49 AM IST
  • அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு பெரிய பரிசு வழங்கியுள்ளது.
  • பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
  • மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அக்டோபர் மாதத்தில் 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
7th Pay Commission: BSNL ஊழியர்களுக்கு நல்ல செய்தி, நவம்பர் மாதம் ஊதியத்தில் ஏற்றம் title=

Dearness allowance latest news: பண்டிகை காலத்தை முன்னிடு, அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு பெரிய பரிசு வழங்கியுள்ளது. அரசாங்கம் பிஎஸ்என்எல் ஊழியர்களின் சம்பளத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

பிஎஸ்என்எல் (BSNL) ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி (Dearness Allowance) அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்தது. இது நவம்பர் 2021 சம்பளத்தில் வழங்கப்படும். இது தவிர ஊழியர்களுக்கு வீட்டு வாடகை கொடுப்பனவிலும் (HRA) அதிகரிப்பு கிடைக்கும். பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

அகவிலைப்படி எவ்வளவு அதிகரித்தது?

பிஎஸ்என்எல் ஊழியர்களின் அகவிலைப்படி  (Dearness Allowance) 170 சதவீதத்தில் இருந்து 179.3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. போர்டு மட்டத்திற்கு கீழே மற்றும் போர்டு மட்டத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் புதிய கட்டணத்தில் அகவிலைப்படி (DA Hike) வழங்கப்படும். 2007 ஆம் ஆண்டின் அடிப்படை ஊதிய திருத்தத்தின் அடிப்படையில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வின் பலன் கிடைக்கும்.

ALSO READ:7th Pay Commission: டி.ஏ அதிகரிப்புக்குப் பிறகு இந்த காரணியும் அதிகரிக்குமா? கணக்கீடு இதோ 

அக்டோபரில் அகவிலைப்படி அதிகரித்தது

BSNL ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 2021  ஜூலை-செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் 170.5 சதவீதத்தில் இருந்து 173.8 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அக்டோபர் 1ம் தேதி 179.3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) இன் மொத்த 1,49,577 ஊழியர்களில், 78,323 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு (VRS-Voluntary Retirement service) வழங்கப்பட்டது.

31 சதவீதம் ஆனது அகவிலைப்படி

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அக்டோபர் மாதத்தில் 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது முன்னிருந்த 28% அகவிலைப்படியை விட 3 சதவீத அதிகரிப்பாகும். இந்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண அதிகரிப்பு ஜூலை 1, 2021 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

ALSO READ:7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மேலும் ஒரு அலவன்ஸ் சேரும்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News