அமைதியாக இருப்பதால் இத்தனை பலன்கள் கிடைக்குமா? இனிமே கம்முன்னு இருக்கனும்…
நாம் அனைத்து சூழல்களையும் அமைதியாக கையாள்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன தெரியுமா? இதோ பாருங்கள்..
நமது நண்பர்கள் குழுவிலேயே, ஒரு சிலர் பார்ப்பதற்கும் பழகுதற்கும் மிகவும் அமைதியாக இருப்பர். ஆனால், அவர்கள் ஒரு முறை வாய் திறந்து ஏதேனும் கூறினால் அல்லது கேள்வி கேட்டால் போதும், நம்மால் திரும்ப பதிலே பேச முடியாது. அந்த அளவிற்கு மிகவும் அமைதியை கடைப்பிடிக்கும் அது பாேன்ற ஆட்களை, பலருக்கு பிடிக்காது என்றாலும் அப்படி சைலண்டாக இருப்பதாக பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்குமாம். அது என்னென்ன தெரியுமா?
கேட்கும் திறன்:
நன்றாக பேசுவது மட்டும் பெரிய திறன் கிடையாது, எதிரில் இருப்பவர் என்ன கூறுகிறார் என்பதை காது கொடுத்து உன்னிப்பாக கேட்கும் திறனும் இருக்க வேண்டும். அமைதியாக இருப்பவர்கள், இப்படி நம்மை சுற்றி யார் என்ன பேசுகிறார் என்பதை நன்கு கவனிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பர். இதனால், இவர்களின் பேச்சிலும் தெளிவு இருக்கும்.
மன அழுத்தத்தை குறைக்கலாம்:
எந்த இடத்தில் பேச வேண்டுமோ அந்த இடத்தில் பேசி, வீண் பேச்சுக்களை தவிர்ப்பதால் பல நேரங்களில் நாம் சண்டை வராமல் தவிர்க்க முடியும். இது, உங்களுக்கு அமைதியான சூழலையும், அழுத்தம் கொடுக்காத நண்பர்களையும் கொடுக்கலாம்.
அதிகரிக்கும் பிரதிபலிப்பு:
அமைதியாக இருக்கும் போது, நம்மால் அதிகமாக யோசிக்கவும் நம்முடன் நாமே பேசவும் முடியும். இது உங்களை உங்களுக்கே ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக அறிமுகப்படுத்தி வைக்கும். இதனால், நீங்கள் எடுக்கும் முடிவுகளையும் தீர ஆராய்ந்து, யோசித்து எடுப்பீர்கள்.
கவனிக்கும் திறன்:
குறைவாக பேசுபவர்களிடம் அதிகமான கவனச்சிதறல் இருக்காது. இதனால், அவர்கள் எந்த விஷயத்தை எடுத்தாலும் அதில் நன்றாக கவனம் செலுத்தி அதை குறிப்பிட்ட நேரத்தில் நினைத்ததை விட அறுமையாக செய்து முடிப்பர். இதனால், அவர்கள் பயன்பெறுவது மட்டுமன்றி சுற்றி இருப்பவர்களும் நல்ல பயன் பெறுவர்.
உறவுகளை வலுவாக்கும்:
நீங்கள் அதிகம் பேசாமல் இருப்பவராகவும், நன்கு கேட்கும் திறன் (Good Listener) கொண்டவராகவும் இருப்பது, உங்கள் உறவுகளை நெடுங்காலம் வாழ வைக்கும். இது போன்றவர்கள் பிறர் பேசுகையில் உண்மையாகவே பிறரது பிரச்சனைகளை கவனம் கொடுத்து காதில் வாங்கி புரிந்து கொள்வர். இது, எதிரில் இருக்கும் நபருக்கு உங்கள் மீது நல்ல மரியாதையை ஏற்படுத்தி, உங்கள் உறவை வலுவாக்கும்.
கவனிக்கும் திறன்:
அமைதியாக இருப்பவர்களுக்கு நன்றாக கவனிக்கும் திறனும் இருக்கும். இதனால், அவர்கள் எந்த சூழலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து நடந்து கொள்வர். இதனால், அவர்களால் ஆபத்து என்றால் கூட உடனே உணர்ந்து கொள்ள முடியும்.
கற்பனை திறன்:
அமைதியை கடைப்பிடிப்பவர்கள், கற்பனை வளம் பொருந்தியவர்களாகவும் இருப்பர். இவர்களுக்கு பிரச்சனையை தீர்க்கும் திறனும் அதிகரித்து காணப்படுமாம். இவர் பெரிதும் பேசாதவர் என்பதால், ஒரு விஷயத்தை கற்பனை செய்கையில் அதை எந்த வித தடையுமின்றி கற்பனை செய்வர்.
நிதானம்:
தோனியை பலர், “கேப்டன் கூல்” என்று அழைக்க காரணம், அவரது சிக்கலான சூழலிலும் நிதானமாக நடந்து கொள்ளும் திறன்தான். அமைதியை கடைப்பிடிப்பவர்கள், உள்ளூர இருந்தே ஒருவித அமைதியை விரும்புபவர்களாக இருப்பராம். இதனால் அவர்களின் உடல் மற்றும் மனதும், ஆரோக்கியமாக இருக்குமாம்.
மேலும் படிக்க | டாக்ஸிக் காதலில் இருந்து பிரிவது எப்படி? 8 வழிகளை பின்பற்றுங்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ