ஜவ்வு மிட்டாய் என்றழைக்கப்படும் பம்பாய் மிட்டாய், என்றவுடனே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மனதிற்குள் மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும் சுவையின் வலிமை இந்த மிட்டாய்க்கு உண்டு. அதிலும் குறிப்பாக 80ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த ஒரு மிட்டாய் என்றே சொல்லலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


விரும்பும் பண்டங்களைத் தேடிச் சென்று சாப்பிடக்கூடிய காலம் இதுவென்றாலும், அன்று நம்மைத் தேடிவந்த சுவைக்க வைக்கும் இனிப்பான தின்பண்டங்களில் கட்டாயம் இதை அடித்து கொள்ள முடியாது. ஆனால், காலப்போக்கில் எல்லாம் மாறிப்போனது. தெருவுக்கு ஒரு பம்பாய் மிட்டாய்க்காரர் இருக்கும் காலம் மறைந்து, ஊருக்கு ஒரு பம்பாய் மிட்டாய்க்காரர் இருந்தாலும் ஆச்சரியம் என்று சொல்லும் அளவுக்கு மாறிப்போனது. 



அதில், கோவை தெற்கு தொகுதியில் வசிக்கும் மக்கள், கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்லலாம்... 80ஸ் கிட்ஸ்க்களை கடந்து தற்போது இருக்கும் 2கே கிட்ஸ்க்கள் வரையிலும்  அதாவது 6 முதல் 60 வயது வரையுள்ளவர்களும் பம்பாய் மிட்டாய்யை சுவைத்து கொண்டிருக்கிறார்கள். 



தேடி தேடி அலைந்தாலும் கிடைக்காத பம்பாய் மிட்டாயை அப்பகுதி மக்களுக்கு தேடி சென்று சுவைக்க வைக்கிறார், பெருமாள் அண்ணன். ஒன்றல்ல இரண்டல்ல கடந்த 40 வருடங்களாக பம்பாய் மிட்டாயைத் தயார் செய்து அப்பகுதி மக்களுக்கு விற்று வருகிறார். டிவிஎஸ் எக்ஸ்.எல்-லில் ஜல் என்ற பொம்மையை கட்டி... கைதட்டுகிற ஓசையுடன் தலைவர் வீதியில் நுழைந்ததும் தெரு முழுக்க சேதி சென்று விடும் அப்படி ஒரு மாஸ்.. மிட்டாய்க்கும் சரி, அது பெருமாள் அண்ணனுக்கும் சரி... 



அன்றைய காலத்தின் கலவை மாறாமல் ; சுவை மாறாமல் பம்பாய் மிட்டாயை சுவை ததும்ப உருக்கி, ஊர் முழுக்க கொண்டு சேர்க்கிறார். சுவை மட்டுமில்லாமல் நாம் பார்த்து சுவைத்த பாம்பு, தேள், கை கடிகாரம், கை கடிகாரம்,யானை, ரயில் என அனைத்து வடிவிலும் செய்து கொடுத்து அசத்துகிறார்.


மேலும் படிக்க | Weight Loss: உடல் எடையை குறைக்க ட்ரை ஃப்ரூட் டயட்


செல்போனில் மூழ்கி கிடக்கும் குழந்தைகளின் பார்வைக்கு சில மணி நேரம் வேடிக்கை காட்டி புத்துணர்ச்சி அளிக்கும் இந்த ஜல் பொம்மை குழந்தைகளை மயக்கும் மந்திரம் என்றே சொல்லலாம். ரசாயனம் கலந்த விதவிதமான மிட்டாய்களின் வருகையே இந்த பம்பாய் மிட்டாய்களின் வீழ்ச்சிக்குக் காரணம். அதையெல்லாம் உடைத்தெறிந்து மீண்டும் தரமான 80ஸ் மிட்டாய்களை ஊக்குவித்தால் அதை இந்த மாவட்டத்தின் எல்லைக்கே கொண்டு சேர்ப்பேன் என்கிறார் பெருமாள் அண்ணா... மாறுமா...


மேலும் படிக்க | பாதாம் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR