காலாவதியான சூப் குடித்ததே மரணத்திற்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்கள் நூடுல்ஸ் (Noodles) பிரியர் என்றால், கவனமாக இருங்கள், ஏனென்றால் இது உங்கள் வாழ்க்கையையும் அழிக்கக்கூடும். இது ஒரு கதை அல்ல ஒரு உண்மை. இதுபோன்ற ஒரு சம்பவம் சீனாவிலிருந்து வந்துள்ளது, அங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் நூடுல்ஸ் சூப் (Noodle Soup) குடித்து இறந்தனர். மற்ற 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது.


அக்டோபர் 5 ஆம் தேதி ஒரு சீன குடும்பத்தினர் காலை உணவுக்கு நூடுல் சூப் குடித்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவல்களின்படி, சூப் குடித்த சில மணி நேரங்களிலேயே மக்களின் நிலை மோசமடையத் தொடங்கியது. அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சையின் போது 9 பேர் இறந்தனர். காலாவதி தேதியின் சூப் குடிப்பதே மரணத்திற்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர்கள் குடித்த சூப் கான் பிளவரிலிருந்து தயாரிக்கப்பட்டு பேக்கிங் செய்த சுமார் 1 வருடம் உறைவிப்பான் பெட்டியில் வைக்கப்பட்டது. ஆனால் அந்த குடும்பம் காலாவதி தேதி போன்றவற்றில் கவனம் செலுத்தவில்லை. இது அவரது மிகப்பெரிய தவறு என்பதை நிரூபித்தது.


போங்க்ரிக் அமிலத்தால் மரணம்


ஆய்வகத்தில் சூப்பை பரிசோதித்தபின், அதில் உள்ள போங்க்ரேக் அமிலத்தின் அளவு மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக, உணவு விஷம் ஏற்பட்டு அனைவரும் இறந்தனர். நிபுணர்களின் கூற்றுப்படி, மாவு மற்றும் அரிசியுடன் தொடர்புடைய உணவுப் பொருட்களில் போங்க்கிரிக் அமிலம் காணப்படுகிறது. இது மிகவும் விஷமானது.


ALSO READ | ஆஹா...சூப்பர்! இணயத்தை கலக்கும் வங்கதேச பெண்ணின் திருமண போட்டோஷூட்....


போங்க்கிரிக் அமிலத்தைக் கொண்டிருக்கும் உணவுப் பொருள் சூடேறிய பிறகும் அதன் விளைவை முடிவுக்குக் கொண்டுவருவதில்லை. இந்த போங்க்ரெயிக் அமிலம் வீட்டில் வைத்திருந்த நூடுல் சூப்பை விஷமாக்கியது.


இது குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?


ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ஷிகா சர்மா கூறுகையில், இதுபோன்ற எந்தவொரு பொருளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு, அதன் காலாவதியை சரிபார்க்க வேண்டும். மேலும், பழைய உணவை வீட்டிலேயே உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். குறிப்பாக தயாரிப்பு திரவமாக இருந்தால், சாப்பிட வேண்டாம். காலாவதி தேதியை விட அதிகமாக கடந்துவிட்டால், உணவுப் பொருட்கள் விஷமாகி, அவற்றில் அமிலம் உருவாகிறது.