மீனவர் கையில் சிக்கிய புதையல்... திமிங்கிலத்தின் வாந்திக்கு ₹25 கோடியாம்..!!!
தாய்லாந்தில் ஒரு மீனவரின் கையில் அதிர்ஷ்டவசமாக ஒரு புதையல் சிக்கியது. அதன் மதிப்பு 25 கோடி.
வாந்தியெடுத்தல் என்பது யாருக்கும் அருவெறுப்பை தூண்டும் விஷயம் தான் என்பதில் சந்தேகம் இல்லை. அதை யாரும் பார்க்க விரும்ப மாட்டார்கள், ஆனால் ஒரு தாய்லாந்து மீனவர் இதனால் கோடீஸ்வரரானார். ஏனென்றால், அவரது கைகளளில் சிக்கியது திமிங்கிலம் எடுத்த வாந்தியான, அம்பெர்கிரிஸ் (Whale Vomit, Ambergris) . ஒரு மாதத்திற்கு 500 பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒரு மீனவர் (Fisherman) , தனது கையில் கிடைத்த ஒரு பாறை போன்ற ஒரு பொருளுக்கு இவ்வளவு மதிப்பு உள்ளது என்பதை அவர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.
அம்பெர்கிரிஸ் என்ற பாறை போன்ற பொருள் கடலின் புதையலாகக் கருதப்படுகிறது, அது தங்கம் (Gold), வைரத்தை போன்று மதிப்பு மிக்கது. இதில், வாசனையற்ற ஆல்கஹால் உள்ளது. இது ஒரு பொருளில் வாசனையை நீண்ட காலமாக பாதுகாக்க பயன்படுகிறது. தாய்லாந்தைச் (Thailand) சேர்ந்த நரிஸ் சுவான்சாங் என்ற மீனவர், கடற்கரைக்கு அருகில் இந்த பாறை போன்ற துண்டைக் கண்டுபிடித்தார். அவர் அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று ஆராய்ந்த போது, அவருக்கு அது வேறு ஏதோ ஒரு பொருள் என புரிந்தது.
ALSO READ | சீனப்பெருஞ்சுவர் குறித்த மர்மங்களும் சுவாரஸ்யங்களும்..!!!
திமிங்கலங்களில் உடலுக்குள் இருந்து ஒரு சிறப்பு பொருள் வெளியே வருகிறது. இது திமிங்கலம் செரிமானத்திற்கு பயன்படுத்தும் பாகம் எனக் கூறுகின்றனர். சில சமயங்களில் திமிங்கிலம் எடுக்கும் வாந்தியில் இது வெளியே வருகிறது. விலையுயர்ந்த இந்த பொருளை, பெரிய பிராண்டுகள் நீண்ட காலமாக வாசனை திரவியங்களில் பயன்படுத்தி வருகின்றன. இது ஒரு பொருள் தனது வாசனையை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. இது வரை கண்டெடுக்கப்பட்டதில், மிகப் பெரிய அம்பெர்கிரிஸ் 100 கிலோ எடை கொண்டது
அம்பர்கிரிஸின் தரத்தை பொறுத்து அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சிறந்த தரம் கொண்டதனால் கிலோவுக்கு, 23,740 விலை கிடைக்கும் என்று ஒரு தொழிலதிபர் தனக்கு வாக்குறுதி அளித்ததாக நரிஸ் என்ற அந்த மீனவர் கூறுகிறார். நரிஸ் தற்போது அதை ஆய்வு செய்யும் நிபுணர்களுக்காக காத்திருக்கிறார். இது விலை மதிப்பு மிக்க பொருள் என்பதால், திருட்டு அபாயம் அதிகரித்துள்ள நிலையில், இது குறித்து அவர் போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளார்.
ALSO READ | இந்தியாவின் மர்ம ஏரி.. இது வரை இங்கு போனவர்கள் திரும்பியதில்லை..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR