குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ளது அம்ரீலி மாவட்டம். அந்த மாவட்டத்தில், சவர்குண்டலா தாலுக்காவில் உள்ள அபரம்பரா என்ற கிராமத்தில் ஒரு ஆச்சர்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரவு நேரத்தில் ஒருவர் களைப்பாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கனமாக ஏதோ ஒன்று தன் மீது உட்கார்திருப்பதை உணர்ந்தார்.  


கண் விழித்து பார்த்தால், தனது நெஞ்சின் மேல் ஒரு பெண் சிங்கம் அமர்ந்திருப்பதை கண்டார்.


இது போன்ற பயங்கரமான சூழ்நிலையில் யாராக இருந்தாலும், பயத்தில் உறைந்து போயிருப்பார்கள்.  அல்லது கத்தியிருப்பார்கள். சிங்கத்திற்கு இரையாகி இருப்பார்கள்.


ஆனால், விபுல் கேலையா என்ற அந்த நபர், ஒரு கணம் , அதிர்ச்சி அடைந்தாலும், தனது பலத்தை எல்லாம் திரட்டி அதனை தள்ளி விட்டார்.


இந்த பதில் தாக்குதலை எதிர்பார்க்காத சிங்கம் என்ன நினைத்ததோ, அவரை தாக்காமல், காட்டுக்குள் போய் விட்டது.


பத்திரிக்கை நிறுவனம் ஒன்றிடம் பேசிய  விபுல் கேலையா, சிங்கம் அதன் இரை நானல்ல என நினைத்ததோ என்னவோ, அதனால், என்னை தாக்காமல் திரும்பி போய்விட்டது என்றார்.


ALSO READ | Watch Viral Video: மழைக்கு பெஞ்சின் அடியில் ஒதுங்கி இளைப்பாறிய முதலை…!!!


இந்த சம்பவத்தை பற்றி மேலும் விவரிக்கையில், “நான் எனது குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தேன். என மீது கனமாக ஏதோ ஒன்று உட்காருவதை உணர்ந்தேன். கண் விழித்து பார்த்தால், அது ஒரு பெண் சிங்கம். உடனே என  பலத்தை எல்லாம் திரட்டி அதனை தள்ளி விட்டேன். அது பதில் தாக்குதலை எதிர்ப்பார்க்கவில்லை போலும். என்ன நினைத்ததோ, அது ஒன்றும் செய்யாமல் சென்று விட்டது.


ALSO READ | வெள்ளி முகக்கவசம் அணிந்து கோவிட் -19ஐ வதம் செய்ய புறப்பட்ட அன்னை துர்க்கை...


அந்த கிராமம் காட்டை ஒட்டிய பகுதி என்பதால், சிங்கம் அங்கே ஆடு மாடுகளை அடித்து தின்பதற்கு அடிக்கடி வரும்  என கூறிய அவர், முதல் முறையாக அது மனிதனை தக்க முயற்சித்துள்ளது என்றார்.


எது எப்படியோ, அந்த நபர், சிங்கத்தை வீழ்த்திய வீரர் ஆகி விட்டார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார்.