அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயதான ஒருவர், தானே தயாரித்த ‘மேஜிக்’ காளான் தேநீரை தனக்குள் செலுத்தி கொண்டதில், மரணத்தின் வாயிலுகே சென்று திரும்பியுள்ளார்.  அதில் சிலோசைபின் என்ற மருந்து உள்ளதால், அதனால் தனது மனநோய் குணமாகும் என்ற நம்பிக்கையில் அவர் தனக்கு தானே சிகிச்சை அளித்துக் கொள்ளும் முயற்சியாக, காளான் டீயை தயாரித்து அதனை ஊசியின் மூலம் தனக்குள் செலுத்திக் கொண்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் விளைவாக, காளான்கள் அவரது இரத்த ஓட்டத்தில் வளர்ந்ததால், அவரது உடல் உறுப்பு செயலிழக்கத் தொடங்கியது. அவரது உடலில் காளான் வளருவதை கட்டுப்படுத்த தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மன நலன் பாதிப்பு உள்ள அந்த நபர், தானே எதைஎதையோ படித்து ஆராய்ச்சி செய்து, இந்த காளான் டீயை தயாரித்து தனக்குள் ஊசி மூலம் செலுத்திக் கொண்டுள்ளார்,


அமெரிக்காவை (America) சேர்ந்த அந்த நபர் காளான்களை தண்ணீரில் வேகவைத்து, ஒரு பருத்தி துணியால் வடிகட்டி, பின்னர் அந்த டீயை ஊசி மூலம் உடலில்செலுத்திக் கொண்டுள்ளார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் அதிக சோர்வாக உணர்ந்த அவர் ரத்த வாந்தியும் எடுத்துள்ளார். அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு அதோடு நிற்கவில்லை. மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் ஆகியவையும் ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.


மருத்துவமனையில், அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அவரது சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை. ஒவ்வொரு உறுப்பாக செயலிழக்க தொடங்கியது. பின்னர் அவருக்கு சுவாச பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. பின்ன வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.  
அந்த நபர் 20 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பியுள்ளார். எனினும் அவர் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.


ALSO READ | Bermuda Triangle: விமானங்களையும் கப்பல்களையும் விழுங்கும் பெர்முடா முக்கோணம்..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR