அழிந்ததாக கருதப்பட்ட பாபூல் மரத்தின் அரிய வகை ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டது!
அகாசியா எபர்னியா என்ற பாபூல் மரத்தின் அரிய வகை 68 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் விஞ்ஞானியும் ஓய்வுபெற்ற உதவி காடுகளின் பாதுகாவலருமான டாக்டர் சதீஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
அகாசியா எபர்னியா என்ற பாபூல் மரத்தின் அரிய வகை 68 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் விஞ்ஞானியும் ஓய்வுபெற்ற உதவி காடுகளின் பாதுகாவலருமான டாக்டர் சதீஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
1951-ஆம் ஆண்டில் தாவரவியலாளர் கே.எஸ்.சங்கலா வடமேற்கு ராஜஸ்தானில் ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டபோது இந்த இனம் முதன்முதலில் காணப்பட்டது. இருப்பினும், அந்த வருடத்திற்குப் பிறகு, ராஜஸ்தானில் வேறு எங்கும் இந்த மரம் கண்டுபிடிக்கப்படவில்லை.
கடந்த 68 ஆண்டுகளாக, எந்தவொரு ஆராய்ச்சிகளிலும் புத்தகங்களிலும் இந்த இனங்கள் பற்றிய தகவல்கள் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று சர்மா கூறுகிறார். தாவரவியலாளர் எம்.எஸ்.பந்தாரி 1978-ல் எழுதிய "Flora of Indian Desert" புத்தகத்தில் இந்த இனம் பற்றி குறிப்பிடவில்லை என்று சர்மா கூறினார்.
இருப்பினும், ஆரவல்லிஸில் உள்ள அகாசியா இனங்களின் பன்முகத்தன்மை குறித்து பணிபுரிந்தபோது, உதய்பூர் நகரத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தார் கிராமத்தில் சாலையோரத்தில் இந்த இனங்களின் ஐந்து மரங்களை அவர் சமீபத்தில் பார்த்துள்ளார். அவற்றில் மூன்று நடுத்தர அளவிலானவை, அவற்றில் இரண்டு சிறிய அளவிலானவை.
அவர் இந்த மரங்களின் பினாலஜி ஆய்வு செய்து அவற்றை மலை அகாசியா இனத்திலிருந்து அடையாளம் காட்டினார். மற்றும் மரத்தின் புவியியல் இருப்பிடம் இந்த முறை வேறுபட்டுள்ளது எனவும் அவர் குறிப்பட்டுள்ளார்.
1951-ஆம் ஆண்டின் முற்பகுதியில், இது மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் காணப்பட்டது, இது குறைந்த மழையுடன் கூடிய பாலைவனப் பகுதியாகும், ஆனால் இப்போது அது உதய்பூரின் தெற்கு அரவள்ளியில் காணப்பட்டது, அதாவது அதிக மழைப்பொழிவு பெறும் அடர்ந்த காட்டு பகுதியில்.
தெற்கு ஆரவல்லி மலைகளில் இந்த இனம் முதன்முறையாக காணப்பட்டாலும், இது ராஜஸ்தானில் இரண்டாவது முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று சர்மா மேலும் கூறுகிறார்.