இயற்கை சூழ்நிலையில் தானாக வளரும் எல்லா உயிரினங்களையும் வன உயிரினங்கள் எனலாம். இந்த வன விலங்குகள் எப்போதும் இயற்கை வாழ்விடங்களில் தனித்து விடப்பட்டவையாகும். அவைகள் அங்கும் இங்கும் சுற்றி திருந்து மகிழ்ச்சியான வாழ்வினை வாழ்த்து வருபவையாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் பலவகையான தாவரங்களும், விலங்குகளும் காணப்படுவதற்கு காரணம் பலதரப்பட்ட சீதோஷ்ணநிலை மற்றும் புவியமைப்பும் முக்கிய காரணமாகும். வீட்டுவளர்ப்பு பிராணிகள், கால்நடைகள், உணவுக்காக வளர்க்கப்படும் பயிர்கள் தவிர்த்து மற்ற அனைத்து தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் ஆகியவற்றை வனஉயிரினங்கள் என்று பொதுவாக அழைக்கிறோம். 


இந்த வன உயிரினங்களை காண்பதற்காக எராளமான சுற்றுலா பயணிகள் காட்டு பயணம் நோக்கி சுற்றி திரிந்து வருகின்றனர். அப்போது அங்கு நடக்கும் அழகான காட்சிகளை வீடியோ எடுத்து அவற்றை ஒளிபரப்புவது வழக்கம். 


அப்படிப்பட்ட காட்சியாக, மும்பை பகுதியில் அமைந்துள்ள காட்டு பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் சிலர் அங்கு அமைதியாக தூங்கி கிடந்த சிங்கத்தை உசுப்பேத்தியதால் சிங்கமானது கோபமடைந்து, அவர்களை கர்ஜித்துள்ளது.  இந்த காட்சியானது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் அமைத்துள்ளது. தற்போது, இதன் காட்சியானது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.