இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் பயனர்களுக்கு பலவிதமான வசதிகளை வழங்குகிறது. UIDAI எந்தவொரு மாற்றத்தையும், புதுப்பித்தலையும் அல்லது திருத்தத்தையும் அனுமதிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், ஆதாரில் (Aadhaar) எந்த தகவலையும் புதுப்பிக்க, பயனர்களுக்கு சரியான ஆவணங்களை வழங்குவது கட்டாயமாகும். Aadhaar-ல் முகவரியை மாற்ற UIDAI 44 வகையான ஆவணங்களையும் ஏற்றுக்கொள்கிறது. இந்த 44 ஆவணங்களில் ஒன்று வங்கி பாஸ் புக் (Bank Passbook) ஆகும். இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் Aadhaar-ல் உள்ள முகவரியை மாற்ற விரும்பினால், அதை நீங்கள் உங்களது வங்கி பாஸ் புக் மூலமும் செய்யலாம்.


இந்த வங்கி பாஸ் புக்கில் உங்கள் புகைப்படம் இருக்க வேண்டும். ஸ்டேம்புடன் வங்கி அதிகாரியின் கையொப்பமும் இருக்க வேண்டும். UIDAI ஒரு ட்வீட் மூலம், இது குறித்து Aadhaar கார்ட் வைத்திருப்பவர்களுக்கு தேவையான தகவல்களை அளித்துள்ளது. தனது ட்வீட்டில் UIDAI, 'நீங்கள் வங்கி பாஸ் புக் மூலம் ஆதாரில் உள்ள முகவரியை புதுப்பிக்க விரும்புகிறீர்களா? அப்படியெனில், முதலில் உங்கள் வங்கி பாஸ் புத்தகத்தில் உள்ள உங்கள் புகைப்படம் வங்கியால் முத்திரையிடப்பட்டிருப்பதையும், அதிகாரியால் கையொப்பம் இடப்பட்டிருப்பதையும் உறுதிசெய்து கொள்ளுங்கள். இவை இல்லாமல், வங்கி பாஸ் புக் சரியான ஆவணமாக கருதப்படாது. 44 ஆவணங்கள் மூலம் UIDAI Aadhaar-ல் உள்ள முகவரியைப் புதுப்பிக்கிறது.” என்று கூறியுள்ளது.



ஆதார் அட்டையில் உள்ள முகவரியை வேறு எந்தெந்த ஆவணங்கள் மூலம் மாற்றலாம்?


பாஸ்போர்ட், வாடகை ஒப்பந்தம், வங்கி அறிக்கை அல்லது பாஸ் புக், ஓட்டுநர் உரிமம், தொலைபேசி பில், மின்சார பில், நீர் பில், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் உதவியுடனும் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றலாம். இதில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய 44 ஆவணங்கள் பற்றிய தகவல்கள் பற்றி UIDAI இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


ALSO READ: Aadhar Card-ல் இந்த 5 விஷயங்களை update செய்ய எந்த ஆவணமும் தேவை இல்லை!!


ஆன்லைனில் Aadhaar-ல் உள்ள முகவரியை எவ்வாறு புதுப்பிப்பது


  • முதலில் UIDAI வலைத்தளத்தளமான https://uidai.gov.in/ க்குச் செல்லவும். இங்கே நீங்கள் ‘My Aadhaar’ என்ற Tab-ஐ காண்பீர்கள். ட்ராப்டௌனில் உள்ள இரண்டாவது Tab, ‘Upadate your Aadhaar’-ல் சென்று அதன் ட்ராப்டௌனில் மூன்றாவது ஆப்ஷனான ‘Update your address online’-ல் கிளிக் செய்யவும்.  


  • அதைக் கிளிக் செய்தவுடன் புதிய பக்கம் திறக்கப்படும். இதில் கீழே சென்றால், ‘Proceed to Update Address’ என்று எழுதப்பட்டிருக்கும் இடத்தில் கிளிக் செய்யவும். இதன் பின்னர் ஒரு புதிய பக்கம் திறக்கப்படும்.


  • இந்த பக்கத்தில், முதலில் உங்கள் ஆதார் எண், கேப்ட்சா சரிபார்ப்பை உள்ளிட்டு கீழே உள்ள ‘Send OTP’-ஐக் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஒரு OTP வரும்.


  • அந்த OTP ஐ உள்ளிடவும். அதன் பிறகு, ‘Data Update Request’-ல் கிளிக் செய்யவும். அதன் பிறகு, முகவரி ஆப்ஷனில் கிளிக் செய்த பிறகு, உங்கள் முகவரி மாற்றப்படும்.


ALSO READ: Aadhaar Card: தொலைந்துவிட்டால் கவலைப்பட வேண்டாம், இந்த வழியில் டிஜிட்டல் ஆதார் download செய்யலாம்!!